தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

வெள்ளி, 5 ஜூலை, 2013

தீக்கதிர் கட்டுரைகள்

 பாசிசத்தின் இந்திய முகங்கள்


தற்போதைய தேசியவாத கவர்ச்சிச் கோஷங்கள் அனைத்தும் 1930களின் பாசிச வரலாற்றோடு இணைந்தவைகளாக உள்ளன. நரேந்திர மோடி இதை பாரம்பரிய கொடையாக கருதுகிறார். ஆர்எஸ்எஸ் ஒரு பாசிச சக்தி என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். தனது கைப்பாவையான பிஜேபியின் மீது கடந்த 10 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ்-சின் பிடி மேலும் இறுகியுள்ளது. ஆளுங்கட்சி மீது பாசிசம் செல்வாக்கு பெறும் போது அரசியல் சாசனத்தின் செயல்பாடு சிதைந்து போகிறது. மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு, தலைமையின் மௌனம், சுதந்திரமான நிர்வாகப்பணிகள் மீது தாக்குதல், இப்படி இந்தியாவின் அமைச் சரவை ஆட்சி முறை நொறுங்கிக் கொண்டிருக்கிறது. தனது சிறந்த நூலான `மதச்சார்பற்ற நாடாக இந்தியா’வில் அதன் ஆசிரியர் டொனால்டு ஈஜின் ஸ்மித் இப்படி கூறுகிறார். “ஐரோப்பிய பாசிசத்தின் இந்திய வடிவம்தான் இந்து அடிப்படைவாதம் என நேரு ஒரு முறைகூறினார். ஆர்எஸ்எஸ்க்கும் கொடுந்தேசியவாதத்தை முன்வைக்கும் பாசிசத்திற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. ராணுவவெறிமயமாக்கல், இன கலாச்சார உயர்வுக் கொள்கை மதவெறிபாய்ச்சிய தீவிர தேசியவாதம், பழமைச்சுவடுகளை பயன்படுத்துதல், மத-இன சிறுபான்மை மக்களை தேசியக் கொள்கை களிலிருந்து விலக்கி வைத்தல் இப்படிப்பட்ட ஆர்எஸ்எஸ்-இன் இயல்புகள்ஐரோப்பிய பாசிசத்தை நினைவூட்டுகின் றன. ஆட்சி அதிகாரத்தின் மூலம் தனது இலக்கை அடைய முடியும் என்பதை ஆர்எஸ்எஸ் நிராகரிக்கிறது. பதிலாக இந்து சமூகம் தனக்குள்ளிருந்து புத்துயிர்ப்பு பெற்றுஎழுந்து வரவேண்டும் என திட்டமிடுகிறது”. இத்தாலிய ஆராய்ச்சியாளர் மார்ஸியா கசோலாரி எழுதிய “1930களில் இந்துத்வாவின் வெளிநாட்டு த்தொடர்பு” மற்றும் “அரசியலில் இந்து தனித்துவத்தை உருவாக்கு வதில் வாரணாசியின் பாத்திரம்” என்னும்கட்டுரைகளை எக்கானமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி வெளியிட்டிருந்தது. மார்ஸியா கசோலாரி “இந்திய தேசியவாதத்திற்கும் நாஜிகளின் பாசிசத்திற்கும் இடையில் உள்ள சந்தேக உறவு” என்னும் நூலையும் எழுதியுள்ளார். “பிரசுரிக்கப்பட்ட ஆவணங்கள், அலுவலகக் கோப்புகள் மற்றும் சுற்றுக்கு விடப்பட்ட இதர ஆவணங்களில் 1920-லிருந்து1940க்கு இடைப்பட்ட காலக்கட்ட பாசிசத்தின் மேல் இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு ஈர்ப்பு இருந்தது. முசோசலினியின் கட்டுரைகள், அவரது வாழ்க்கை வரலாறு ,கோஷங்கள் இந்தக் குழுக்களுக்குள் சுற்றுக்கு விடப்பட்டன. 1938ல் சாவர்க்கர் தலைவராக இருந்த காலத்தில் நாஜி ஜெர்மனிதான் இந்து மகாசபைக்கு பொருத்தமான முன்னுதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. இனம் தொடர்பான நாஜிகளின் கொள்கைகள்தான் இந்தியாவில் முஸ்லிம் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு கடைப்பிடிக்கப்படவேண்டும் இந்துவெறி அமைப்புகள் இரண்டு முக்கிய அரசியல் பாதைகளை 1920-1940 காலத்தில் தேர்ந்தெடுத்திருந்தன. ஒன்று ஐரோப்பிய பாசிச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருந்த இனம் சார்ந்த கருத்துருவாக்கத்தை போல சக்தியான சொல்லாடல்கள் மூலம் இந்துத்வா நோக்கத்தை உச்சத்திற்கு கொண்டு செல்வது. மற்றொன்று இந்து சமுதாயத்திடம் கட்டுப்பாட்டுணர்வு குறைவாக இருப்பதாக குறிப்பிடும்படியான முயற்சிகள் மூலம் மக்களை நம்பவைப்பது. அவர்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம் எதிர்ப்பு இலக்குடன் இந்து சமுதாயம் ராணுவ வெறியூட்டப்படவேண்டும். 1920-களிலிருந்து முஸ்லிம்கள்தான் முதன்மையான இலக்காக கருதப்பட்டு பிரிட்டிஷாரை விட அபாயகரமானவர்கள் என முஸ்லிம்கள் கூர்ந்து கவனிக்கப் பட்டனர்” நூல் நெடுகிலும் மார்ஸியா தனது கருத்தை ஆவணங்களின்வழி கூறுவதில்கவனமாக-நிதானமாக இருந்திருக்கிறார். காந்தியின் படுகொலையில் சாவர்க்கருக் கும் பங்கு இருந்தது என உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எல். கபூர் முடிவுக்கு வந்திருந்தார். இதன் காரணமாகவே ஆர்எஸ்எஸ்- ஜனசங்கத்திற்கும் இடையே கருத்துவேறுபாடு உருவானதாக இட்டுக்கட்டப்பட்டது. இந்தக் கட்டுக்கதையை ஆராய்ச்சியாளர் மார்ஸியா உடைத்தெறிந்துள்ளார்.“கே.பி.ஹெட்கேவாரை தவிர்த்து பி.எஸ்,மூஞ்சே, எல்.வி.பரஞ்சாபி, பாபாராவ் சாவர்க் கர் மற்றும் சிலரைக் கொண்டதுதான் இந்து மகாசபை. ஒரே அரசியல் கொண்ட இந்த ஒரு சிறிய குழுவால் உருவாக்கப்பட்டதுதான் ஆர்எஸ்எஸ். ஹெட்கேவார் 1925 இல் சாவர்க்கரை ரத்னகிரி சிறையில் சந்தித்து ஆர்எஸ்எஸ்-ஐ உருவாக்குவதற்கு அறிவுரைகளை கேட்டார்”. பி.எஸ்.மூஞ்சே இந்து மகாசபை-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பாலமாக செயல்பட்டவர். இவர் 19.3.1931 அன்று ரோம் நகரில் முசோலினியை சந்தித்தார். அவரிடம் ஆர்எஸ்எஸ் போல குறிக்கோள் கொண்ட சுதந்திரமான ஒரு அமைப்பை நான் துவங்கியுள்ளேன் என முசோலினியிடம் தெரிவித்தார்.“இத்தாலியில் பாசிஸ்ட்கள் ஜெர்மனியில் நாஜிகளைப் போல இந்தியாவில் எதிர்காலத்தில் உருவாவோம் என இந்துத்வாகருதுவதாக ஒரு பிரிட்டிஷ் உளவுத்துறை அறிக்கை கூறியது. 23.6.1934-ல் நடைபெற்றபம்பாய் இந்து மகாசபை மாநாட்டில் ஆர்எஸ் எஸ்-ஐ உருவாக்கிய ஹெட்கேவாரை பாராட்டியது. ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ள 15 பேர் கொண்ட குழுவினை மாநாடு நியமித்தது. அதில் என்.டி. சாவர்க்கரும் என்.சி.கேல்கரும் அடங்குவர்”. இந்து மகாசபைக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் இடையே இருந்த உறவிற்கு இது மேலும் ஒரு ஆவண சாட்சியமாகும். “பம்பாய் மாநாட்டிற்கு பிறகு சாவர்க்கர் ஆர்எஸ்எஸ் கிளை அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றினார். இக்கூட்டங்களில் பங்கேற்ற மத தீவிரவாதிகளையும் சாவர்க்கர் வெளிப்படையாக பாராட்டவும் செய்தார். இக்கூட்டங்களில் ஹெட்கேவாரின் பங்கை பாராட்டவும் சாவர்க்கர் தவறவில்லை. 29.7.1939 அன்று புனேயில் குருபூர்ணிமா ஆர்எஸ்எஸ் விழாவில் சாவர்க்கர் உரையாற்றினார். சில ஆண்டுகளுக்கு பிறகு27-29.5.1943 மூன்று நாட்கள் மூஞ்சே தலைமையில் கோல்வால்கர் முன்னிலையில் ஐயாயிரம் பேர் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற்றது. சாவர்க்கர் அதில் கலந்து கொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டி பெருமை பொங்க உரையாற்றினார்”. ஹிட்லரை விமர்சனம் செய்ததற்காக நேருவை சாவர்க்கர் கடுமையான தாக்கிப்பேசியதோடு செக் நாட்டின் சூடன்டெண்லேண்ட் நகரை ஹிட்லர் ஆக்கிரமித்த தையும் அவரது யூதக்கொள்கையையும் ஆதரித்தார். இந்திய முஸ்லிம்கள் அந்த திசைவழியில்தான் நடத்தப்படவேண்டும் என விரும்பினார்.“ஆரியக் கலாச்சாரத்தை புதுப்பிக்கும் பெருமைமிக்க ஜெர்மனியின் கொள்கையை, ஸ்வஸ்திகாவின் புகழை, ஆரியக்கல்விக்கான ஆதரவு மற்றும் இந்திய ஜெர்மானிய கலாச்சாரத்தின் வெற்றியை உணர்வுமிக்க இந்திய இந்துக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்” என 25.3.1939 அன்று இந்து மகாசபை கூறியது. “நேரு தலைமையிலான ஒரு சில சோசலிஸ்ட்டுகள் ஜெர்மனிக்கு எதிரான கோப நீர்க்குமிழிகளை தோற்றுவிக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் அது எடுபடவில்லை. ஜெர்மனியின் தவிர்க்கமுடியாத வலிமைக்கு முன்னே மகாத்மா காந்தியின் சாபம் எதுவும் பலிக்காது, ஆரிய கலாச்சாரத்தின் எதிரிகளோடு ஜெர்மனி நடத்தும் புனிதப்போர் உலகமெங்கும் உள்ள ஆரிய இன நாடுகளை சிந்திக்க வைக்கும்”. சங் பரிவாரம் நாட்டின் விடுதலை இயக்கத்தில் பங்கேற்கவில்லை. 9.9.1939 அன்று சாவர்க்கர் வைஸ்ராய் லின்லித்கோவை சந்தித்தார். பிரிட்டிஷ் அரசுடன் ஒரு உடன்பாடு செய்து கொள்ளவிரும்புவதாகத் தெரிவித்தார். “அவர் (சாவர்க்கர்) மாட்சிமை பொருந்திய மன்னர்பிரானின் அரசு இந்துக்கள் பக்கம் திரும்பவேண்டும். அவர்கள் ஆதரவுடன் வேலை செய்யவேண்டும். கடந்த காலத்தில் என்னதான் இந்துக்களுக்கும் நமக்கும் உறவில் பிரச்சனைகள் இருந்தாலும் பிரிட்டன்-பிரெஞ்ச் உறவைப்போல சமீபத்திய நிகழ்வுகள் காட்டும் ரஷ்யா-ஜெர்மனி உறவுகளை போல உண்மையில் சரிசமமானது. இந்துக்கள் பிரிட்டனின் நட்புறவோடு தற்போதைய நமது நலன்கள் பிணைந்துள்ளதால் பழைய பகைமைகள் இனி தேவையில்லை”. மார்ஸியாவின் நூலுக்கான கருத்துரைகள், குறைவாகவும் எல்லைக்குட்பட்டும் முழுநிறைவான ஆவணமாக உள்ளது குறிப்புரைகள் ஆழ்ந்த நோக்கை பிரதிபலிப்பவைகளாக உள்ளன. நூலில் எதிரி என்பதன் கோட்பாடு இந்திய தேசியத்திற்கும் இந்து தேசியத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்குவதாக உள்ளது. முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரசின் இந்திய தேசியம் என்பதன் கருத்தெல்லை பிரிட்டிஷாரை எதிரியென நிறுத்துவதற்குரியதாக இருந்தது. 1930களில் காங்கிரசை விட்டு விலகி தனது தனிப்பட்ட கொள்கைகளை முஸ்லிம் லீக் உருவாக்கத்துவங்கியது. தனக்கென ஒரு நாட்டின் திட்டத்தையும் உருவாக்கிவளர்க்கத் தொடங்கியது. ஆயினும் இந்தக்கொள்கைகள் சகோதரப்படுகொலையை ஆதரிக்கவில்லை. அதே சமயத்தில் முஸ்லிம்களுக்கான தனிநாடு உருவாவது இந்துக்களின் எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. சரியோ தவறோ இந்திய முஸ்லிம்களின் நலன்களை எடுத்துக்கூறும் கொள்கை பலவீனத்திற்கான பரிகாரமாகத்தான் புதிய நாடு உருவாவதை அவர்கள் கண்டனர். சங்பரிவாரத்தின் அடாவடித்தனமான முஸ்லிம் எதிர்ப்புப் பேச்சுக்கள் ஒரு வன்முறைச் சூழலை உருவாக்கியதோடு முஸ்லிம் குழுக்கள் மத்தியில் பிரிந்துசெல்லும் மனநிலையை வளர்த்தன. நாடு முழுவதும் தனி நாடு அறைகூவலை முஸ்லிம்கள் மத்தியில் பரப்பியது. இந்தப் பிரிவினைக்கு சங்பரிவாரமும் காங்கிரஸ் கட்சியிலிருந்த அதன் அனுதாபிகளும்தான் பொறுப்பாகும். 4.11.1948 அன்று டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியல் சாசன வரைவை முன்மொழிந்து பேசும்போது அரசின் நிர்வாக அமைப்பு அரசியல் சாசனத்தோடு நெருங்கிய தொடர்புள்ளது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டார். அரசு நிர்வாக முறை என்பதன் புரிதல் அரசியல் சாசனத்தின் உன்னத நெறிகளின் மிகச்சரியான புரிதலோடும் இணைந்திருக்க வேண்டும். வேறுவார்த்தைகளில் சொல்லப்போனால் அரசியல் சாசன விதிகளை திருத்தாமலே நிர்வாக முறையில் மாறுதல் செய்வதன் மூலம் அரசியல் சாசன விதியை பொருத்தமாற்ற தாக்கி சிதைத்து அதன் சாரத்திற்கு எதிராகமாற்றிவிடவும் முடியும். நரேந்திர மோடி உள்பட 19 மத்திய அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் பின்னணியில் உள்ளனர். இந்து ராஜ்யத்தை ஏற்படுத்த இவர்கள் அரசியல் சாசனத்தை திருத்தவேண்டியதில்லை. சங்பரிவாரத்தின் ஒரு குரு சியாமா பிரசாத் முகர்ஜி இவர்களுக்கு ஒரு பாதையையும் காட்டியுள்ளார். 6.1.1946 தேதியின்அவரது நாட்குறிப்பில் “75 சதம் இந்துக்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்கள் விரும்பினால் ஜனநாயக வடிவ அரசை ஏற்க முடியும். அதில் முக்கிய பாத்திரத்தையும் வகிக்கமுடியும்”. இதுதான் பெரும்பான்மைவாதம் என்பது. தொடர்ந்து நிர்வாக ஆணைகளின் மூலம் மதச்சார்பின்மை கோட்பாட்டை கிழித்தெறிந்துவிட்டு புதிய சூழ்நிலையை உருவாக்க முடியும். அரசு நிர்வாகத்தின் வடிவம் மாற்றப்பட்டு வருகிறது. அதே வேளையில் அரசியல் அமைப்புச் சட்டம் இப்போது தாக்குதலுக்குள்ளாகியும் இருக்கிறது. நன்றி: பிரண்ட்லைன் 23.1.2015தமிழில் சுருக்கம்: ப.தெட்சிணாமூர்த்தி


ஊழல் சேற்றில் மம்தா கட்சி


அமலாக்கப் பிரிவு இயக்குநரின் விசாரணையில் உள்ள சாரதா சீட்டுக்கம்பெனி ஊழலில் மேற்குவங்க அரசும், ஆளும் கட்சியின் தலைவர்களும் சிக்கியுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி மேற்கொள்ளப்டும் .சிபிஐ விசாரணையில், திரிணாமுல் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக சிக்கி வருகின்றனர். புதிய தொழிற்சாலைகள் துவங்கு வதற்கான திட்டங்களை சீர்குலைத்திட மாவோயிஸ்டுகளுடன் கரம் கோர்ப்பதில் துவங்கி, மேற்கு வங்கத்தில் வந்து முதலீடு செய்திடுமாறு முதலீட்டாளர்களின் கால்களில் விழுவது வரையிலான நடவடிக்கைகள் மூலமாக, அரசியலில் இரட்டை நிலைபாடு எடுப்பதில் புதிய உயரங்களை மம்தா பானர்ஜி எட்டியுள்ளார். அவநம்பிக்கைகளுக்கு இடையே சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தொழிலதிபர்கள் கூட்டத்தில், கடந்த கால நிகழ்வு களுக்காக மம்தா உண்மையில் மன்னிப்பு கோரினார். பல விஷயங்களுக்காக அவர் மன்னிப்புகேட்க வேண்டும். 2004-2005 முதல் 2011-2012 வரையிலான காலத்தில், உற்பத்தித் துறையில் புதியவேலைவாய்ப்புகளை உருவாக்கிடுவதில் அப்போது மேற்கு வங்கத்தில் இடதுசாரி தலைமையில் அமைந் திருந்த அரசு நாட்டிற்கே வழிகாட்டியது. தேசியமாதிரி ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்களின்படி, அக்காலகட்டத்தில் இந்திய நாடு முழுவதிலும் உற்பத்தித் துறையில் 51.3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதில் 27.4 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி மேற்கு வங்கம் முதலிடத்தை வகித் தது. 9.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உரு வாக்கி குஜராத் இரண்டாம் இடத்திலேயே இருந்தது. ஆனால் தற்போதோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுவது என்பதி லிருந்து வேலை இழப்புகள் ஏற்படு வது எனநிலைமை தலைகீழாக மாறிப் போயிருக்கிறது. எனவேதான், மேற்குவங்க முதலமைச் சரின் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.கடந்த மூன்றாண்டுகளில், மேற்கு வங்க மாநிலத்தில் சணல் தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், இன்ஜினியரிங் யூனிட்டுகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட, கிட்டத்தட்ட 90 தொழிற் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் வாயிலாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஷாலிமர் பெயிண்ட்ஸ், இடதுசாரி அரசின் ஆட்சிக் காலத்தில் இரண்டாவது ஹூப்ளி மேம் பாலத்தைக் கட்டும் பணியை மேற்கொண்ட புகழ் பெற்ற நிறுவனமான ஜெஸாப், பிர்லாவின் இந்துஸ்தான் மோட்டர்ஸ் ஆகியன மூடப் பட்ட நிறுவனங்களில் அடங்கும். 2012ம் ஆண்டில் டன்லப் நிறுவனம் தனது தொழிற்சாலையை மூடியது. அதே போல், நோக்கியா-சீமென்ஸ் தனது கொல்கத்தா யூனிட்டை மூடியது. கடந்த ஆண்டு ஹல்தியா ரசாயன தொழிற்சாலையில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, இத்தொழிற்சாலையை சார்ந்திருந்த துணை நிறுவனங்களிலும் கடுமையான தாக்கங்கள் ஏற்பட்டன. இன்னும் சொல்லப் போனால், மேற்கு வங்கத்தின் தொழிற்துறை பகுதிகளான அசன்சோல்-துர்காபூர் பகுதிகள், பாரக்பூர் பகுதி அல்லது ஹல்தியா நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் ஆகியன, தற்போது நடைமுறையில் எந்தவொரு தொழிற்சாலையும் இல்லாத பகுதிகளாக மாறிப் போயுள்ளன.இதற்கான காரணங்களைக் கண்டு பிடிப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல. பலவந்தமாகக் கைப்பற்றுவது, அச் சுறுத்திப் பணம் பறிப்பது, இத்தகைய நடவடிக்கை களில் ஈடுபட்ட ஆளும் கட்சியைச் சார்ந்தகுண்டர்களை பாதுகாத்ததற்காக முதலமைச்சரின் கீழ் நேரடியாகச் செயல்படும் மாநிலக் காவல்துறையை சார்ந்தவர்களுக்கு பரிசளிக் கப்படுவது போன்ற தீய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற ஒரு மாநிலத் தில் தொழிலதிபர்கள் வந்து ஏன் முதலீடு செய் திட வேண்டும்? அச்சுறுத்தி பலவந்தமாக பணம் பறித் திடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குழுக்களிடையே 2013ம் ஆண்டில் எண்ணற்ற மோதல் சம்பவங்கள் நடைபெற்றன. திரிணா முல் காங்கிரசின் தொழிற்சங்கத்தின் துணைத்தலைவரின் தூண்டுதலின் பேரில்துர்காபூர் பகுதியில் உள்ள சிறு தொழிலதிபர்கள் தொழிற்சங்கத் தலைவர்களால் அச்சுறுத்தப் படுவதாக துர்காபூர் தொகுதி திரிணாமுல் சட்டமன்ற உறுப்பினர் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதே ஜூலை மாதத்தில், திரிணாமுல் காங்கிரசின் தலைவர்கள் கமி ஷன் தரும்படி நிர்பந்திப்பதாக அசன்சோல் பகுதியைச் சார்ந்த புகழ் பெற்ற உருக்கு தொழிற்சாலை அதிபர் காவல்துறையிடம் புகார் அளித்தார். “அச்சுறுத்தி பலவந்தமாகப் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் தனது கட்சி யினர் ஈடுபடமாட்டார்கள் என மம்தா பானர்ஜிமார் தட்டி வருகிறார். ஆனால், அவரது கட்சிக் காரர்கள் என் கண் முன்பே அச்சுறுத்திப் பலவந்தமாகப் பணம் பறிக்கிறார்கள்“ என கடந்தஆண்டு சிங்கூர் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் கூறியது தலைப்புச் செய்தியானது. அரசியலில் தங்களை எதிர்ப்பவர்களை கட்சித் தலைமையின் ஆதரவுடன் குண்டர்களை ஈடுபடுத்தி வன்முறையை கட்டவிழ்த்திடும் சூழலே தற்போது மேற்குவங்கத்தில் நிலவி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சார்ந்த பெண்கள் எனதுகுண்டர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவார்கள் என அச்சுறுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரை மாநிலமுதல்வர் வெளிப் படையாகப் பாதுகாக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியதி காரம் அம்மாநிலத்தில் நிலைநிறுத்தப்படும் வரை, இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்பதே இதிலிருந்து எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி தெளிவாகிறது. ஆனால், அரசியலை கிரிமினல்மய மாக்குவது என்ற பூதம் ஒருமுறை கட்ட விழ்த்துவிடப்பட்டு விட்டது என்றால், அதோடுஅது நிற்காது. மேலும், அரசியல் எதிரிகளின் மீது வன்முறையை நிகழ்த்திடுவதற்கான அனுமதி என்பது, ஊழல் மற்றும் பலவந்தமாகப் பணம் பறிப்பது போன்ற நடவடிக்கைகள் வாயிலாக தனது சொத்துக்களை பெருக்கிக் கொள் வதற்கான அனுமதியாகவும் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவுடன் செயல்படும் குழுக்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு தொழிற்சாலைகள் சுலபமான இலக்கு களாகின்றன. முதலீடு செய்வதற்கு சாதகமற்ற இத்தகைய சூழலே இங்கு நிலவி வருகிறது. அந்தந்த தொழிற்சாலையே தனக்குத் தேவையான நிலங்களை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கான “உதவிகளை அரசு செய்திடும்“ என்று சொல்லி தொழிற் சாலைகளுக்குத் தேவையான நிலங்களை அளிப்பது தொடர்பாக அவர் இரட்டை நிலைபாட்டை எடுக்கிறார். “அரசியல் நிர்ப்பந் தங்கள்” காரணமாக அரசே நேரடியாக நிலத்தை கையகப்படுத்திட இயலாது என் றும் அவர் கூறுகிறார். அவரது அரசுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அரசியல் நிர்ப்பந்தங்கள் எல்லாம் அவராலேயே ஏற்படுத்திக் கொள்ளப் பட்டவை என்பதனை அனைவரும் அறிவர். முதலமைச்சரின் இத்தகைய பேச் சானது, விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பெற்றிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் இருக்கக் கூடிய நில வியாபாரிகளுக் கும், இடைத்தரகர்களுக்கும் வெளிப்படையாக விடுக்கப்படும் அழைப்பே ஆகும். அச்சுறுத்தி பலவந்தமாகப் பணம் பறிக்கும் நடைமுறைகள் தொழிற்சாலைகள் நிறைந்துள்ள பகுதி களிலேயே உள்ளன. அவ்வாறு இருக்கையில், “உதவிடுதல்“ என்ற பெயரில், நிலத்தை விற்பனை செய்திட ஒப்புக் கொள்வது அல்லது மறுப்பது என்பதற்கான விவசாயிகளின் உரிமை மீது திரிணாமுல் குண்டர்கள் கிராமப் புற பகுதிகளில் முரட்டுத்தனமாக எத்தகைய தாக்குதல்களை தொடுப்பார்கள் என்பதனை எவர் ஒருவரும் ஊகித்திட இயலும். சிங்கூர் பகுதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகள் தங்களது நிலத்தை நானோ தொழிற் சாலைக்கு விற்பதற்கான சம்மதத்தை அளித் திருந்தனர். ஆனால், மம்தாவின் “அரசியல் நிர்ப்பந்தங்கள்” நானோ கார் தொழிற்சாலை குஜராத் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்திட உதவியது. சிங்கூரின் விவசாயிகள் இதனால் துயருற்றனர்.உண்மையில், தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது அதில் தலையிட அரசு மறுத்ததன் காரணமாக சணல் மற்றும் தேயிலை ஆகிய இரண்டு பிரதான தொழிற்துறைகளில் தகராறு ஏற்பட்டது. அரசியல் இணைப்புகளுக்கு அப்பாற்பட்டு தொழிற் சங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட வலுவான ஒற்றுமை காரணமாக வலுவான இயக்கங்கள் நடைபெற்றன. நியாயமான தொழிற்சங்க இயக்கங்களின்பால் கடுமையான தாக்குதல் அணுகுமுறையையே மம்தா அரசு வெளிப் படுத்தியது. சட்டப்பூர்வமான போராட்ட நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வெளிப்படையாகத் தொழிலாளர்களை அவர் அச்சுறுத்தினார். அரசுக்கு எதிரான தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்த அவரது கட்சி உறுப்பினர்களை அவர் ஆதரித் தார். தொழிலாளர்களின் உரிமைகள் இவ்வாறு மீறப்பட்டு, தாக்கப்படுவதன் மூலம், தொழில் வளர்ச்சியை எப்போதும் நீடிக்க முடியாது.அமலாக்கப் பிரிவு இயக்குநரின் விசார ணையில் உள்ள சாரதா சீட்டுக் கம்பெனி ஊழலில் மேற்கு வங்க அரசும், ஆளும் கட்சியின் தலைவர்களும் சிக்கியுள்ளனர். நீதி மன்ற உத்தரவின்படி மேற்கொள்ளப்படும் சிபிஐவிசாரணையில், திரிணாமுல் கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக சிக்கி வருகின்றனர். சிறையிலடைக்கப்பட்டுள்ள திரிணாமுல் தலைவர்களின் வாக்குமூலங்களை அடுத்து, முதலமைச்சர் விசார ணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த ஊழலில் ஒவ்வொருவரும் மற்றொருவர் மேல் குற்றம் சுமத்தி வரும் போக்கு எங்கு போய் முடியும் என்ற ஊகத்தில் மேற்கு வங்கத்தில் உலவிக் கொண்டிருக்கிறது.மேற்கு வங்கத்தில் முதலீடு செய்பவர் களுக்கான கூட்டத்தை திரிணாமுல் காங்கி ரஸ் அரசு பல்வேறு இடங்களில் நடத்தியுள்ளது. கொல்கத்தாவிலிருந்து மும்பை, அங்கிருந்து சிங்கப்பூர் என்று சென்று தற்போது மீண் டும் கொல்கத்தாவிலேயே இக்கூட்டம் நடத் தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மீண்டும் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட, முதலீட்டாளர்களின் கூட்ட நிகழ்விடத்தை மாற்றுவது, கார்ப்பரேட்டுகளின் கால்களில் விழுவது என்பதனைத் தாண்டிய நடவடிக் கைகள் தேவை.நன்றி - என்டிடிவி.காம் தமிழில் - எம்.கிரிஜா

அறிவியல் மனப்பாங்கு உலர்ந்து உதிர்கிறதா?

அறிவியல் மனப்பாங்கு உலர்ந்து உதிர்கிறதா?



நம் அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில், `அடிப்படைக் கடமைகள்’ குறித்துக் கூறும், 51-ஏ (எச்) பிரிவு, “அறிவியல் மனப்பான்மை, மனிதாபிமானம் மற்றும் எதையும் ஆய்வு செய்து, சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வளர்த் தெடுப்பது’’ என்று வரையறுக்கிறது.`இந்துத்துவா பரிவாரங்கள்’ இத்தகைய அரசமைப்புச் சட்டம் விதித்திருக்கும் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் நேரெதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மும்பையில் நடைபெற்ற 102ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் நடந்தது என்ன?
`சமஸ்கிருதம் மூலம் வேதகால அறிவியல்’ என்று அழைக்கப்பட்ட சிறப்பு அமர்வு எல்லாவற்றையும் விஞ்சிவிட்டது என்றே கூற வேண்டும். புராதன காலத் தில் (“இந்து நாகரிகக்காலத்தின்’’ பெரு மைமிகு காலம் என்று வாசிக்க) இந்திய அறிவியல் மிகவும் பெருமைப்படக்கூடிய அளவிற்குப் பேரழகுடன் விளங்கியது என்று கூறி அதற்குப் பல உதாரணங்கள் கூறப்பட்டன. ஆகாய விமானங்களை இயக்கக்கூடிய விமானிகளை உருவாக்கும் பயிற்சி மையத்திற்கு முதல்வ ராக இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கி.மு. 5000 ஆண்டுவாக்கில், ஆகாயவிமானங்களை உருவாக்கும் தொழில் நுட்பம் இந்தியாவில் இருந்தது என்று சரடுவிட்டிருக்கிறார்.
இதற்கு சமஸ்கிருத நூலான, வியமானிக சாஸ்திரம் என்னும் நூலை ஆதாரமாக முன்வைக்கிறார். அதில்மகரிஷி பரத்வாஜா ஆகாயவிமான தொழில்நுட்பத்தைக் குறித்து ஆவணப்படுத்தி இருக்கிறார் என்று கூறுகிறார். இந்திய அறிவியல் மாநாடு ஒவ்வோராண்டும் இந்திய அறிவியலில் அடைந்த முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளைப்பற்றியும், மேற்கொண்ட பரிசோதனைகளின்போது ஏற்பட்ட குறைபாடுகள் குறித்தும், எதிர்காலத் திசைவழியைத் தீர்மானிக்கக்கூடிய விதத்திலும் விவாதித்திடும் அமைப்பாகத் தான் இதுநாள்வரை இருந்து வந்தது.
அத் தகையதோர் அமைப்பை, தங்களுடைய `அறிவியல்பூர்வமற்ற மனப்பாங்கைப்’ பரப்பிடும் ஒரு மேடையாகப் பயன்படுத்த முயற்சித்திருப்பது அருவருக்கத்தக்க ஒன்று. ஒவ்வோராண்டும் நடைபெறும் இம்முக்கிய மாநாட்டை இந்தியப் பிரதமர்தான் தொடக்கி வைப்பார். (அவர் உடல் நலிவின்றி இருந்தால் மட்டும் விதிவிலக்கு உண்டு.) அந்த சமயத்தில் அவர்அறிவியல் சமூகத்திடமிருந்து அரசாங் கத்தின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்தும் அரசாங்கத்தின் கொள் கைத் திசை குறித்தும் கோடிட்டுக் காட்டிடுவார்.
இப்போது மோடி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின், வரலாற்றை திருத்திஎழுதுவது மற்றும் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் எண்ணற்ற தலை வர்களிடமிருந்து நம் பண்டைக்காலத்தை வானளாவப் புகழ்ந்து தள்ளுவது ஆகியவற்றால் அனைவரையும் மலைக் கவைக்கும் அறிக்கைகள் வந்துகொண்டி ருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது அறிவியல் மாநாட்டிலும் விசித்திரமான கூற்றுகள் எல்லாம் அரங் கேறத் தொடங்கி இருக்கின்றன.
இவ்வாறு விசித்திரமான முறையில் பேசுவதிலிருந்து பிரதமர்கூட விதிவிலக்காகிவிடவில்லை. மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் பிள்ளையாருக்கு இருக்கும் யானை தலையையும் மனித உடலையும் குறிப்பிட்டு இதன்மூலம் அந்தக்காலத்திலேயே நம் நாட்டில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைமூலம் விலங்கின் தலையையும், மனிதனின் உடலையும் பொருத்தும் வல்லமையை நம் முன்னோர் பெற்றிருந்தார்கள் என்று பேசியவர்தான்.
அதேபோல் ஆண்-பெண் சேர்க்கையின்றி கர்ணன் பிறப்பு நடந்ததுகூட அறிவியலாளர்களின் சாதனை என்று அளக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இவ்வாறு, போலி விஞ்ஞானக் கற்பனைகள் மூலமாக அறிவியல் வரலாற் றுக்கும் பொது வரலாற்றுக்கும் மாற்றாக தங்கள் புராணக் கதைகளை வைத்திடும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். இவ்வாறு முட்டாள்தனமான, கேலிக்குரிய முறையில் எண்ணற்ற கூற்றுகளை ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்திய வரலாற்றில் முத்திரை பதிக்கக்கூடிய விதத்தில் எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பதில் ஐயமேதும் இல்லை. வான் கோள்களின் ஆய்வியல், கணிதம் ஆகியதுறைகளில் உண்மையில் அளப்பரிய சாதனைகளை இந்திய விஞ்ஞானிகள் படைத்திருக்கிறார்கள். பூஜ்யம் கண்டு பிடிக்கப்படவில்லை என்றால் நவீன அறிவியலே சாத்தியமாகி இருக்காது. பூஜ்யம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முடிவிலி என்னும் கருத்தாக் கமும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றைத் தொடர்ந்து எதிர்மறை எண்கள் விகிதமுறா எண்கள், இருபடிச் சமன்பாடுகள் போன்று எண்ணற்ற கணித கண்டுபிடிப்புகள் வெளிக்கொணரப்பட்டிருக்க முடியாது. இவை எல்லாம் குறித்தும் மேற்கத்திய உலகம், அராபிய வர்த்தகர்கள் மூலம் அறிந்து கொண்டபோதிலும், (அவர்கள் தான் இத்தகைய அறிவியல் சாதனை களை மேற்கத்திய உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்கள்),
அவர்கள் இவை கண்டுபிடிக்கப்படுவதற்கு இந்திய விஞ்ஞானி களே காரணம் என்பதையும் மிகவும்நேர்மையான முறையில் உலகுக்குப் பறை சாற்றினார்கள். ஆயினும் இவைஅனைத்தும் கி.மு. எட்டாம் நூற்றாண் டுக்கு வெகு காலத்திற்குப் பின்னர்தான் (அதாவது தற்போது ஆர்எஸ்எஸ்பாஜக கூட்டம் குறிப்பிடும் காலத்திற்கு நாலாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான்) நடந்துள்ளன என்று வரலாற்றாய் வாளர்கள் அறிவியல்பூர்வமாக மெய்ப்பித் திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் கூறும் காலமான ஏழாயிரம் ஆண்டு களுக்கு முன் இம்மண்ணில் மனித குல நாகரிகம் எப்படி இருந்தது? தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், மானுட வியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் மிகவும் உழைத்து அறி வியல் நடைமுறைகளின் மூலமாக மனித குல வளர்ச்சியை ஆவணப்படுத்தி இருக் கிறார்கள்.
கி.மு. 5000க்கும் 4000க்கும் இடையில், மனிதகுல வளர்ச்சி மற்றும்செயல்பாடுகள் என்பவை மக்களால்“கைகளால் செய்யப்பட்ட மட்பாண்டங் கள் மற்றும் பருத்தி விவசாயம்’’ என்கிற அளவிற்குத்தான் இருந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பு தொல்பொருள் ஆய்வாளர்கள் மொகஞ்சா தாரோ நாகரிகத்தை ஆய்வு செய்து அதன்அடிப்படையில் இத்தகைய முடிவுக்குவந்திருக்கிறார்கள். இது, மொகஞ் சாதாரோ-2 கால கட்டம் என்று அழைக்கப் படுகிறது.
அத்தகைய காலகட்டத்தில் ஆகாய விமானத் தொழில்நுட்பம் போன்ற விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இருந்தன என்ற கற்பனை நம்பமுடியாத ஒன்று என்று தலைசிறந்த இந்திய வரலாற்று அறிஞர்கள் இந்திய மக்கள் வரலாற்று மாநாட்டில் கூட்டாக சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 2015 ஜனவரி 6 அன்று `தி இந்து’ நாளேடு தீட்டியுள்ள தலையங்கத்தில், “மனிதகுலம் வானத்தில் பறப்பது போன்று கற்பனை செய்வது என்பது பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. (எடுத்துக்காட்டாக, லியார்னடோ டா வின்சி காலத்திலேயே, உண்மையில் ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஓர் ஆகாயவிமானம் குறித்த விவரமான வரைபடங் கள் வரையப் பட்டிருக்கின்றன -ஆசிரியர்) இத்தகைய கற்பனைகளையெல்லாம், கற்பனைக் கதைகள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமேதவிர, இவையெல்லாம் அறிவியல் உண்மைகள் அல்ல.
கிரேக்க புராணக் கதைகளில்கூட வேதாளம் போன்ற கற்பனை உயிரினங்கள் குறித்து கூறப்பட்டிருக்கின்றன. அத்தகைய புராணக் கதைகளில் கூறப்பட் டிருப்பதைப்போல மிகப்பெரிய உருவங்களில் விலங்குகளை உருவாக்கும் உயிரணுக்களை தற்போதுள்ள விஞ்ஞானி களால் உருவாக்க முடியும். எனவே அந்தக் காலத்திலேயே கிரேக்கர்கள் மிகப்பெரிய விலங்கினங்களை உருவாக்கும் அறிவியலின் முன்னோடிகள் எனக் கூற முடியுமா?
இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியானது அறிவியல் கற்பனைகளில் காணப்படும் பல வகை உருவங்கள் போன்று உருவாக் கும் வல்லமையை இன்றைய அறிவியலாளர்கள் பெற்றுக் கொண்டிருக் கின்றனர். எனவே இதுவெல்லாம் அன்றே இருந்தது என்று கூற முடியுமா? அறிவியல் கற்பனைக் கதைகளின் முன்னோடியான சர் ஆர்தர் சி கிளார்க் 1945ல் தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள்கள் குறித்து ஓர் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்திருக்கிறார். இன்றையதினம் அவர்எண்ணி எழுதியதுபோல ஒவ்வோராண் டும் டஜன் கணக்கில் செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.’’மாறாக, இந்துத்துவா கூட்டத்தாரின் கூற்றுக்களையெல்லாம் உண்மை என்று நாம் எடுத்துக் கொள்வோமானால், பண்டைக் காலத்தில் அறிவியல் ரீதியாக அத்தகைய கண்டுபிடிப்புகளை நாம் பெற்றிருக்கையில்,
இம்மண்ணில் இருந்த பல்வேறு சமஸ்தானங்களும், நம் நாட்டுமீது படையெடுத்து வந்த அந்நியர்களை ஏன் தோற்கடிக்க முடிய வில்லை, இந்தியா வெள்ளையரின் காலனிஆதிக்கத்தின் கீழ் மாறுவதற்கான காரணம் என்ன என்பவை குறித்தும் அவர்கள் விளக்கிட வேண்டும். நம் நாட்டின்மீது இந்துகுஷ் மலைப்பகுதி வழி யாகவும், பிற வழிகளின் வழியேயும் படை யெடுத்து வந்தவர்கள் பயன்படுத்திய அறிவியல்ரீதியில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்தியதுதான்,
நம் நாட்டில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் அவர்களிடம் சமர் புரிந்து வெற்றிபெற முடியவில்லை என்பது தான் அடிப்படைக் காரணமாகும். இந்துத்துவா கூட்டம் புராதன இந்துநாகரிகத்தினை குறைத்து மதிப்பிட்டுள் ளார்கள் என்று மார்க்சிஸ்ட் வரலாற்றா சிரியர்கள் மீது அடிக்கடி குற்றம் சுமத்துகிறது. இந்துத்துவா கூட்டம் புனைந்திடும் “வரலாற்றை’’யெல்லாம் நாம் இப்பகுதியில் தொடர்ந்து அம்பலப் படுத்திக்கொண்டு வருகிறோம். மாறாக, இவர்களின் கருத்துக்கள் குறித்து 2015 ஜனவரி 6 தேதியிட்ட தி ஆசியன் ஏஜ் நாளேடு தன் தலை யங்கத்தில் என்ன கூறியிருக்கிறது என்று பார்ப்போம்.
“புராதன இந்தியாவின் முன்னேற்றங்கள், பேராசிரியர் இர்பான் ஹபிப் (இவர் ஒரு முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது) அல்லது மகா பண்டிட் ராகுல சாங்கிருத்தியாயன் (இவர்களுடன் டி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா, ரொமிலா தாப்பர் மற்றும் பலரையும் இப்பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்-ஆசிரியர்) போன்ற மார்க்சிஸ்ட்டுகளால் எழுதப்பட்டவைகளிலிருந்துதான் மிகவும் விரிவான அளவில் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கின்றன. உண்மையில், காவிக் கூட்டத்தைச் சேர்ந்த எவரொருவராலும் வரலாற்றில் நிலைத்து நிற்கக் கூடிய விதத்தில் இத்தகைய அறிவார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூற முடியாது.’’“இந்திய அறிவியல் மாநாட்டில் காவிநூலால் பின்னப்பட்ட ஆடை’’ என்று தலைப்பிட்டு எழுதியுள்ள இத்தலை யங்கம் மேலும், “விவாதத்திற்காக, காவிக்கூட்டத்தினர் காவி நூலால் இந்திய அறிவியல் காங்கிரசில் பின்னும் ஜோடனைகளை ஏற்றுக்கொண்டு புரா தன இந்தியர்கள் ஆகாய விமானங்களில் வான மண்டலத்தில் உள்ள பல்வேறு கிரகங்களுக்கும் சென்றனர் என்று வாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம். அப்படி சிறந்து விளங்கிய நம்மால், ஆகாயவிமானம் இருக்கட்டும், இப்போது சொந்த மாக ஒரு காரைக்கூட தயாரிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோமே, அதற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டிருக்கிறது. இவ்வாறு கேட்டுவிட்டு, “சொந்த மதத்திற்கு திரும்புவோம்’’(கர்வபாசி) என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மத வெறியர்கள் பிற்போக்கான தத்துவார்த்த நிலைப்பாட்டை பிரச்சாரம் செய்வதற்காக இப்போது அறிவியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் அமைப்புகளையும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தின் முக்கிய இடங்களை ஆக்கிரமித்துவிட்டதாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், என்று தலை யங்கத்தை முடித்திருக்கிறது. உண்மையில், நாட்டின் இன்றைய ஆட்சி அதிகாரம் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் வந்துவிட்டது போன்றே நடந்துகொண்டிருக்கிறார்கள். அறிவியல் மாநாடு நடைபெற்ற அன்றைய தினமே,ஆர்எஸ்எஸ் தலைவர், அகமதாபாத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், “இப் போதைய சாதகமான நிலையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா ஓர் இந்து நாடு,’’ என்று பேசி இருக்கிறார். மோடி அரசாங்கத்தின் `குறிக்கோள்’ என்ன என்பதுகுறித்து இதற்கும் மேல் சொல்ல வேண்டுமா, என்ன?இன்றைய தினம் நாடு எதிர் நோக்கியுள்ள ஆபத்துக்கள் இவை களாகும். கோல்வால்கர் பிரச்சாரம் செய்ததைப் போன்று இந்து பெருமையை நிலை நிறுத்திட, தற்போதைய நவீன மதச் சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ்-இன் குறிக்கோளான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றியமைத்திட, `அறிவியலற்ற மனப்பாங்கைப்’ பரப்புவதன் மூலம் வரலாற்றை மாற்றி எழுத வேண்டியது இவர்களது தேவையாகும். நாடும் நாட்டு மக்களும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இவர்களது இத்தகைய இழிவான முயற்சிகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.தமிழில்: ச.வீரமணி
அறிவியல் கற்பனைகளில் காணப்படும்பலவகை உருவங்கள் போன்றுஉருவாக்கும் வல்லமையை இன்றைய அறிவியலாளர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். எனவே இதுவெல்லாம் அன்றேஇருந்தது என்று கூற முடியுமா?

மக்களுக்காக மக்களோடு இணைந்து மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாநாடு
- ஆர்.பத்ரி (சிபிஎம் மாவட்டச் செயலாளர், நீலகிரி)

- -


 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட மாநாடு ஜனவரி 9 முதல் 11ம் தேதிவரை பந்தலூர் தாலுகா எருமாட்டில் எழுச்சியாக நடைபெற உள்ளது. வழக்கமான மாநாடாக இல்லாமல், இதை ஒரு மக்கள் மாநாடாக, மக்கள் கோரிக்கைகளை முன்னெடுக்கும் மாநாடாக, மக்களோடு இணைந்து நடத்த மாவட்டக் குழுவும், வரவேற்புக் குழுவும் இணைந்து முடிவு செய்த போது, உற்சாகம் தொற்றிக் கொள்ள களத்தில் இறங்கினர் தோழர்கள். நிகழ்ச்சிகள் புதுமையாக மட்டுமல்ல, மக்களை ஈர்க்கும் வகையிலும், மக்கள் பிரச்சனைகளை விவாதிக்கும் வகையிலும் அமைய வேண்டும் என திட்டமிடப்பட்டன. கருத்தரங்குகள், விளையாட்டு போட்டிகள், தியாகிகள் நினைவுக்குடில்கள், பரவலாக விளம்பரங்கள் என ஒவ்வொன்றாக பன்முக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதோ அவை அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து மாவட்ட மாநாட்டையும் துவக்க தயாராகி விட்டனர் தோழர்கள்.9 வது மாநாடு என்பதை நினைவு படுத்தும் வகையில் 9 கருத்தரங்குகள் என திட்டமிடப்பட்டு, மாதர் கருத்தரங்கம், இளைஞர் கருத்தரங்கம், தொழிலாளர் கருத்தரங்கம், விவசாயிகள் கருத்தரங்கம், மாணவர் கருத்தரங்கம், பொன்விழா கருத்தரங்கம், மத நல்லிணக்க கருத்தரங்கம், தோழர்கள் ஜி.சுரேஷ், கே.ராமச்சந்திரன் நினைவு கருத்தரங்கம் என 9 கருத்தரங்ககங்ள், கட்சியின் பொன்விழா ஆண்டை நினைவு படுத்தும் வகையில் மாநாடு நடைபெறும் பகுதி முழுவதும் மறைந்த தலைவர்கள் நினைவால் அமைக்கப்பட்டுள்ள 50தியாகிகள் நினைவு குடில்கள், கால்பந்து போட்டி, சதுரங்க போட்டி, மக்கள் ஒற்றுமை கயிறு இழுக்கும் போட்டி என பலரையும் இணைக்கும் விளையாட்டு போட்டிகள் என மாநாட்டு நிகழ்ச்சிகள் கடந்த ஒரு மாதமாக உற்சாகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாநாட்டை நடத்தும் எருமாடு கமிட்டியில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் வீடுகளிலும் கட்சி கொடியேற்றப்பட்டு பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது.
மாநாட்டில் பங்கேற்கும் தோழர்களுக்கு எளிமையாகவும், சுவையாகவும் உணவை வழங்க வேண்டும் என திட்டமிட்ட தோழர்கள் உணவு பொருட்களை சேகரிக்கும் விதமாக ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு, கட்சிக்கிளை மூலம் காய்கறி மற்றும் உணவுப்பொருட்கள் சேகரிக்கும் ஊர்வலம் ஒன்றையும் நடத்தி உணவிற்கான பொருட்களை சேகரித்தனர். இந்த முயற்சியும் தோழர்களை உற்சாகப்படுத்தியது. இப்படியாக மக்களோடு இணைந்து, மக்கள் ஒத்துழைப்போடு, மக்கள் மாநாடாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.மாநாட்டு விவாதங்களும் மக்களைப் பற்றியதாக, மாவட்ட பிரச்சனைகள் குறித்த விவாதங்களை பிரதானப்படுத்தியதாகவே அமையும். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாவட்டத்தின் சமூக, பொருளாதார பிரச்சனைகளை விவாதிக்கவும், எதிர்கால திட்டமிடல்களை மேற்கொள்ளவும் வழிகாட்டும் மாநாடாக அமையும். தேயிலை விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், சூழல் சுற்றுலாவை மேம்படுத்தவும், நிலப்பட்டா, குடிமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை மூன்னெடுக்கவும், மாவட்ட மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு உள்ள தலித், பழங்குடி மக்களின் சமூக, பொருளாதார தேவைகளை நிறைவேற்றவும், வன உரிமை அங்கீகார சட்டத்தை அமலாக்கவும், ஏழை உழைப்பாளி மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கவும் பல்வேறு தீர்மானங்களை வடித்தெடுக்கும் மாநாடுஅதற்கான தொடர் போராட்டங்களையும் திட்டமிட உள்ளது. லஞ்சம், ஊழல் என அதைச்சுற்றியே வலம் வரும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், தனிநபர் துதிபாடல்களே எங்கள் அரசியல் பாதை என்பவர்களுக்கு மத்தியில்,மதவாத அஜெண்டாக்களை முன்வைத்து மக்களை பிளவுபடுத்தும் அரசியல் கருத்துக்கள் அதிகரிக்கும் காலகட்டத்தில் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்கும், அதற்காக தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, அதன் நடவடிக்கைகளை ஆதரிக்கும் மாவட்ட மக்கள் கட்சியின் மாவட்ட மாநாட்டை பெருமளவு ஆதரிப்பதோடு, மாநாட்டு தீர்மாங்கள் செயல்வடிவம் பெறும் போது மேலும் மேலும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கைகளோடும், உற்சாகத்தோடும் களத்தில் பணியாற்றும் கட்சியின் மாநாடு வெல்லட்டும். எதிர்கால இயக்கங்கள் வெற்றிபெறட்டும்.



போராட்டங்களே புத்தொளி பாய்ச்சும்!


புதிய ஆண்டு பிறந்துள்ள சூழலில் மோடிஅரசாங்கத்தின் `அவசரச் சட்ட ஆட்சி’ இனி தொடரும் என்பது போலவே தோன்றுகிறது. அண்மையில் பிரகடனம் செய்யப்பட்ட நான்கு அவசரச் சட்டங்களுடன், குறைந்தது மேலும் ஐந்து அவசரச் சட்டங்களைக் கொண்டுவர மோடி அரசாங்கம் கருதிக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த பயன் பாடுகள் அனைத்தும் திருத்தப்பட்ட நிலம் கையகப்படுத்தல் அவசரச்சட்டத்தில் மறுக்கப் பட்டிருப்பதுடன், நில உடைமையாளர்களாக இல்லாவிட்டாலும் நிலத்தைச் சார்ந்து வேலை செய்து வந்த விவசாயத் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு சட்டத்தில் உறுதிமொழி அளிக்கப்பட்ட இழப்பீடு அல்லது புனர்வாழ்வு அம்சங்கள் போன்றவை அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன.
1996ஆம் ஆண்டு விசார ணை மற்றும் சமரசச்சட்டம் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு, 2014 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஊழலை வெளிக்கொணர் வோர் பாதுகாப்புச் சட்டம், ஜவுளித்துறை சட்டங்கள் மற்றும் தில்லியில் உள்ள 895 அதிகாரப்பூர்வமற்ற முறையில் எழுந்துள்ள காலனிகளை வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களையொட்டி முறைப்படுத்தல் ஆகியவற்றுக் காகவும் திருத்தங்கள் கொண்டுவர அமைச் சரவைத் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
`அவசரச் சட்ட ஆட்சி’யை நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இடதுசாரிகள் மட்டும் எதிர்த்திடவில்லை. இதரமதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளும் நாடாளு மன்றத்தில் இதனை எதிர்த்தன. தி இந்துநாளேடு தன் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: “குளிர்காலக் கூட்டத்தொடர் முடிந்து ஒருசில நாட்களுக்குள்ளேயே அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருப்பதன்மூலம், காங்கிரஸ் அரசாங்கத்தால் மேற்கொள்ளப் பட்டபோது, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கருதிய அதே காரியங்களை, தாங்களும் செய்வதற்கு எவ்விதத் தயக்கமும் காட்டவில்லை என்பதையே நரேந்திர மோடிஅரசாங்கம் காட்டி இருக்கிறது. நாடாளு மன்றக் கூட்டத்தொடருக்கு இடைப்பட்ட காலத்தில் மிகவும் அவசரமான நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற் காக அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். மாநிலங்களவையில் அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை இல்லை என்பதற் காகவோ அல்லது நாடாளுமன்றத்தில் எழுந்த முட்டுக்கட்டையை சரிசெய்ய முடியாமலோ இத்தகைய வேலைகளில் அது இறங்கிடக் கூடாது.’’ (டிசம்பர் 31, 2014)தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு கூடபெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அவசரச் சட்டங்கள் அவசியமா கிறது என்கிற மத்திய நிதி அமைச்சரின் அறிக்கையை மறுத்துள்ளது.
அது தன் தலையங்கத் தில், “முக்கியமான சீர்திருத்தங்களைக் கொண்டுவர மோடி அரசாங்கம் அவசரச்சட்ட வழியைத் தேர்ந்தெடுத்திருப்பது சங்கடத் திற்குரிய பல கேள்விகளை எழுப்பியுள்ளன. ... உண்மையில், அவசரச்சட்டங்கள் மூலம்சீர்திருத்தங்கள் என்பது மோடி அரசாங்கம் பற்றிசரியான சமிக்ஞைகளைத் தந்திடவில்லை.’’ (டிசம்பர் 31, 2014)பொருளாதார நிலைமைகளைப் பொறுத்த வரை, பிரதமர் மோடியால் வழக்கமான வாக்குறுதிகள் திரும்பத் திரும்ப முழங்கப்பட்ட போதிலும், நிலைமை மிகவும் மோசமாகி இருக்கின்றன. மோடி அரசாங்கம் பொறுப்புக்கு வந்த பின்னர், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி சொல்லிக்கொள்ளக்கூடிய அளவிற்கு இல்லை. தொழில் உற்பத்தி அட்ட வணை மேலும் மோசமாகி இருக்கிறது. 2013 அக்டோபரில் மைனஸ் 1.2 சதவீதமாக இருந்தது, இப்போது மைனஸ் 4.2 சதவீதமாக மாறி இருக்கிறது. உற்பத்தித் துறையிலும் அது மைனஸ் 7.6 சதவீதமாக மாறியுள்ளது. இதன் பொருள், இதுநாள்வரையில் வேலையில் இருந்தவர்கள்கூட, ஏற்கனவே வேலையற்று இருந்த பிரம்மாண்டமானவர்களின் பட்டாளத் துடன் சேர்ந்துள்ளார்கள் என்பதேயாகும். அரசாங்கத்தின் தரப்பில் பணவீக்க விகிதம் வீழ்ந்து விட்டது என்று பீற்றிக் கொண்டபோதிலும், மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் சார்பில் 2014 நவம்பரில் பணவீக்கம் சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள விவரம் மாறுபட்ட சித்திரத்தைத் தந்திருக்கிறது. அனைத்துப் பண்டங்களுக்குமான சென்ற ஆண்டின் பொது அட்டவணை 4.38 சதவீதம் வளர்ந்திருக்கிறது.
நுகர்வோர் உணவு விலைப் பணவீக்கம் 3.14 சதவீதம் வளர்ந்திருக்கிறது. பணவீக்க விகிதம் குறைந்துவிட்டதாக அரசாங்கத்தின் தரப்பில் பீற்றிக்கொள்ளப்பட்டுள்ளதால், மக்களின் வாழ்வாதாரங்கள் மேம்பட்டிருக்கிறது என்று அர்த்தமல்ல. பணவீக்க விகிதம் குறைவது என்பது, விலைவாசிகள் குறைந்திருக்கிறது என்று அர்த்தமல்ல. குறைந்த விகிதத்தில் விலைவாசிகள் உயர்கின்றன என்பதே அதன் பொருளாகும். ஆனால், பொருள்களின் விலைவாசிகள் இப்போதும் உயர்ந்து கொண்டுதானிருக்கின்றன. விலைவாசிகள் உயர்கின்றன என்பதன் பொருள் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் சீர்கேடு அடைந்து கொண்டிருக்கின்றன என்பதேயாகும். உலகப் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சி அடைந்த சமயத்திலும் இது நடந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சுமார் 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன.
இதன் காரணமாக பெட் ரோலியப் பொருட்களின் விலையைக் குறைத்து, அதன்மூலம் போக்குவரத்துக் கட்டணங்களைக் குறைத்து, நம் மக்களுக்கு நிவாரணத்தை அளித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. சர்வதேச அளவில் விலை குறைந்தபோதிலும், அரசாங் கம் அதற்கிணையாக கலால் வரிகளை உயர்த்தி விலைகளை நேர் செய்து விட்டது. இவ்வாறு மக்கள் மீது சுமைகளை ஏற்றி மோடி அரசாங்கம் ஈட்டிய லாபம் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். உலக அளவில் உணவுப் பொருள்களின் விலைகளும் மைனஸ் 7.5 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஆயினும், நம் நாட்டில் விலை உயர்வு தொடர்கின்றன.வேளாண் துறையில் நிலைமை மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் மாறி இருக்கிறது. நடப்பு ரபி பயிர்க்காலத்திற்கு பயிரிடப்படும் மொத்தப் பரப்பளவு 2014 டிசம்பர் 19 தேதி வாக்கில் மைனஸ் 5.3 சதவீதம் அளவிற்கு குறைந்துவிட்டது. அதேபோன்று கரீப் பயிர்கள்உற்பத்தி மூலம் மொத்த அரிசி உற்பத்தி 129.3லிருந்து 120.3 மில்லியன் டன்களிலிருந்து 92.3 மில்லியன் டன்களிலிருந்து 88 மில்லியன் டன் வரை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நம் மக்களுக்கு பிரதானமாக புரதச் சத்தை அளிப்பதற்கு அடிப்படையாக இருக்கும் தானியங்களின் உற்பத்தி 6லிருந்து 5.2 சதவீதம்ஆக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. பருப்பு வகைகள் 31லிருந்து 27.1 மில்லியன் டன்களாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
உணவு தானிய உற்பத்தி குறைந்திருப்பது மட்டுமல்ல, விவசாயிகள், விவசாயம் செய்வது நிலையான ஜீவனத்திற்கு வழிவகுக்காததால், மிகப்பெரிய அளவிற்கு விவசாயத்தைக் கைவிட்டுவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறார்கள். வேளாண் இடு பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதாலும், வேளாண் விளைபொருள் களுக்கு அரசாங்கம் தரும் குறைந்தபட்ச ஆதார விலை போதுமான அளவிற்கு இல்லாத தாலும் விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தற்கொலையை நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். விவசாய நெருக்கடி, அதிகரித்து வரும் வேலையின்மை, நாளும் உயரும் விலைவாசி ஆகியவற்றின் பொருள் மோடி அரசாங்கத்தின் கீழ் மக்களின் வாங்கும் சக்தி தொடர்ந்து கடுமையாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பதுதான். நுகர்வுப் பொருள்களின் உற்பத்தி மைனஸ் 18.6 சதவீதம் அளவிற்கும், தொலைக்காட்சிப் பெட்டிகள், ஃப்ரிஜ் போன்ற ஒருசில ஆண்டுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய நுகர்வுப் பொருள்கள் உற்பத்தி மைனஸ் 35.2 சதவீதம் அளவிற் கும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. ஏனெ னில் முன்பு உற்பத்தி செய்து சந்தையில் விற்பனைக்காக வைத்திருக்கும் பொருள்களே மக்களிடம் வாங்குவதற்குப் பண வசதி இல்லாததால் விற்பனையாகாது தேங்கிக் கிடக்கும் நிலை இருப்பதால், புதிதாக அவைஉற்பத்தி செய்யப்படவில்லை.
எனவே, வளர்ச்சி குறித்தும் நாட்டின் வளங்கள் குறித்தும் மோடி அரசாங்கத்தால் அவிழ்த்துவிடப் பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் மாயைகளாகிக் காற்றில் கரைந்துபோய்விட் டன. (மேலே குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 2014 நவம்பரில் மத்திய நிதிஅமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங்களுக்கான துறையிலிருந்து வெளிவரும் மாதாந்திர பொருளாதார அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை களேயாகும்.)இவை எல்லாவற்றிற்கும் உச்சபட்ச மாக, மோடி அரசாங்கம், ஆட்சிப் பொறுப் பேற்றவுடனேயே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த, திட்டமில்லா செலவினங்கள் அனைத்திலும் 10 சதவீதம் வெட்டு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தது. இதையும்விட மோச மான விஷயம் என்னவெனில், கடந்த ஆறு மாதங்களில் முக்கியமான துறைகளுக்காக பட்ஜெட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட திட்டச் செலவினங்களில் கூட, மோடி அரசாங்கம் 30 சதவீதத்திற்கும் குறைவாகவே செலவு செய் திருப்பதுதான். பிரதமரால் `தூய்மை இந்தியா’ என்று மிகவும் படாடோபமாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டிருந்தபோதிலும், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டச் செலவினத்தில் 2014 செப்டம்பர் இறுதி வாக்கில் 29 சத வீதம் மட்டுமே செலவு செய்திருக்கிறது. இதரஅமைச்சகங்கள் மேற்கொள்ளும் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் கதியும் இதே போன்று மோசம்தான். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் 29 சதவீதமும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 28 சதவீதமும், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் 23 சதவீதமும் மட்டுமேசெலவு செய்திருக்கின்றன. இதே போன்று தான் மற்ற அமைச்சகங்களும் செலவு செய் திருக்கின்றன. (மின்ட் நாளேடு, டிசம்பர் 29, 2014) ஒட்டுமொத்தத்தில் இந்தப் புள்ளி விவரங்கள் அனைத்தும் வெளிப்படுத்தும் விவரம் என்ன? மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமான முறையில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதுதான். `நல்ல காலம் வருகுது’ என்கிற மோடி அரசாங்கத்தின் முழக்கம் உண்மையில் (ஏழை-பணக்காரன்) என இரு இந்தியர்களுக்கும் இடையேயான இடைவெளியை மேலும் விரிவாக்கி இருக்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன.மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் அதிருப்தியைத் திசைதிருப்பும் நோக்கத் தோடு, ஆட்சியாளர்களால் மதவெறித் தீ மிகவும் தீவிரமாக விசிறிவிடப்படுகிறது.
நாடாளு மன்றத்தில் மத்திய இணை அமைச்சர் ஒருவரின் அருவருக்கத்தக்க பேச்சுக்கு பிரதமர்மிகவும் சுருக்கமான முறையில் தலையிட்ட போதிலும், உயர்மட்ட அளவில் இயங்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக செய்தித்தொடர்பாளர்கள் நாடு முழுதும் மதவெறித் தீயைக் கொளுந்து விட்டெரியச் செய்யக்கூடிய விதத்தில் கருத்துக்களைத் தெரிவித்து வருவது தொடர்கிறது. கொல்கத்தாவில் உரையாற்றிய ஆர்எஸ் எஸ் தலைவரும், கேரளாவில் உரையாற்றிய பாஜக தலைவரும் தாங்கள் `மீண்டும் மத மாற்றம்’ பிரச்சாரத்தைத் தொடர்வோம் என்றுகொக்கரித்துள்ளனர். ஒவ்வொரு நாளும், நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கக் கூடிய விதத்தில், அரசமைப்புச் சட்டம் மற்றும்நாட்டின் அனைத்துச் சட்டங்களையும் மீறக் கூடிய விதத்தில் மதவெறிக் கருத்துக்களை தெளித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறார்கள்.இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உத்தர வாதப்படுத்தப்பட்டுள்ள அம்சங்களை மீறுவோர், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றங்களைப் புரிவோர், குறிப்பாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள பாஜக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்கள் புரிந்துள்ள கிரிமினல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எவ்விதமான உறுதிமொழி யையும் தர பிரதமர் மறுத்துவிட்டார்.
மாநிலங்களவை ஸ்தம்பித்ததற்கு இதுவே காரண மாகும். இவ்வாறு மோடி அரசாங்கத்தின் பிடி வாதப்போக்கின் காரணமாக நாடாளுமன்றம் நடைபெறாமல் போய் இருக்கக்கூடிய அதே சமயத்தில் அதையே காரணமாகக் கூறி இப்போது அவசரச்சட்டங்களைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.அவசரச் சட்டங்களின் மூலம் ஆட்சிசெய்யும் எதேச்சதிகாரப் போக்கு நம் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளங் களையே அழித்துவிடும். மத்திய அரசாங்கத்தில் அதிகாரம் குவிவதன் விளைவாக இத்தகைய எதேச்சதிகாரம், நாடாளுமன்றத்தின் செயல் பாடுகளைக் குழிதோண்டிப் புதைப்பதோடு நின்றுவிடாமல், நாடாளுமன்றத்திற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்கிற கடமையையும் கைவிடச்செய்து, அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சமாக விளங்கும், கூட்டாட்சித் தத்துவத்தையே மறுதலித்துவிடும். இவர்களது இத்தகைய நடவடிக்கைகள் இவர்களது இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை, அதாவது நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை ஆர்எஸ்எஸ்-சின் அடிப்படைச்சித்தாந்த மான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்கு வழிவகுத்திடும்.இவர்களது நடவடிக்கைகள் மூலம், நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கும், நம் மக்களுக்கும் அச்சுறுத்தல்கள் பெருகிஇருக்கின்றன. இதுநாள்வரை இவர்கள்வெறிபிடித்த மதவெறியையும், அரக்கத்தன மான முறையில் நவீன தாராளமய பொருளா தார சீர்திருத்தங்களையும்தான் பின்பற்றி வந்தார்கள்.
இப்போது இவற்றுடன் இவர்கள் `அவசரச் சட்டங்கள்’ மூலம் எதேச்சதிகார நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டார்கள். எனவே, 2015ஆம் ஆண்டு இத்தகைய ஆபத்துக்களுக்கு எதிரான போராட்டங்களும் மக்கள் எதிர்ப்பும் வெற்றி பெறப்போகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதைப் பொறுத்தே முடிவுசெய்யப்படும். எனவே, அத்தகைய மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தி, நம் மக்களின் வாழ்வாதாரங் களை மேம்படுத்திடவும், இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் அடித்தளங்களைப் பாதுகாத் திடவும் புதிய ஆண்டில் முன்வர வேண்டும்.
(டிசம்பர் 31, 2014)
(தமிழில்: ச.வீரமணி)


சத்தியபிரதா பால், தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர்
காவியின் பன்முகங்கள்
கடந்த டிசம்பர் 11ம்தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்தபடி ஐநா சபை ஜூன் 21ம்தேதியை சர்வதேச யோகா நாளாக ஏற்றுக் கொண்டது. அதை இந்தியா கொண்டாடியது. ஆனால் அதற்கு முந்தைய நாள் அவருடைய ஆட்சியின் கீழ் முதல் மனித உரிமை நாளாகும். அது கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.தெற்காசிய சார்க் மாநாட்டில் மோடி நாம் வளர்ச்சியை நோக்கி பாலங்களை அமைக்கும்போதே எந்த நம்பிக்கையும் இல்லாமல் வாழும் பல இலட்சக்கணக்கான மக்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் நமது பொறுப்பை விட்டு விடக்கூடாது என்று குறிப்பிட்டார். அவர் ஒரு ஒப்பிட முடியாத கதைசொல்லியாவார்.
அவர் மீது நம்பிக்கையுள்ளவர்களின் மனதில் அவர் கூறும் கதைகள் அப்படியே உண்மைகளாக பதிந்து விடும். அவருடைய நடிப்பில் எந்த குறையும் இருக்காது.1990ல் ஐநா மனித வளர்ச்சி அளவுகோல்அறிக்கையை மக்களே ஒரு தேசத்தின் உண்மையான சொத்து என்ற சவாலுக்குரிய கருத்தாக்கத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உண்மையில் நாம் வசதியானவர்கள்தானா? இருபது ஆண்டுகள் தேசியசராசரி உற்பத்திக்கு பின்னர் சார்க் அமைப்பை நாம் மிகப் பெரிய அளவில் பிளவுபடுத்துகிறோம். ஒரு புறம் கிழக்கு நோக்கி ஒரு கால் வைத்து சீனத்தை வெளியேற்ற முயற்சிக்கிறோம். மறுபுறம் மேற்குநோக்கி இன்னொருகால் வைத்து பாகிஸ்தானை கீழே தள்ளுகிறோம். குள்ளமானவர்கள் மத்தியில் ராட்சசனைப் போன்று நாம் நகருகிறோம். ஆனால் சமத்துவமான வளர்ச்சியை அளவிடும் அளவுகோலை வைத்துப்பார்க்கும்போது நமக்கும் நமது அண்டைய நாட்டவர்களுக்கும் இடையே தேர்வு செய்ய மிகக்குறைவான விசயங்களே உள்ளன.
ஐநாவின் மனித வளர்ச்சி அளவுகோல் 2014ன்படி 187 நாடுகளின் வளர்ச்சி படி நிலை பட்டியலில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது. இலங்கை நம்மைவிட சற்று முன்னேறிய நிலையில் 73வது இடத்தில் உள்ளது. பூடான் நமக்கு மிக அருகில் 136வது இடத்திலும் நேபாளம் 145வது இடத்திலும் மற்றும் பாகிஸ்தான் 146வது இடத்திலும் உள்ளன. உண்மை என்னவெனில் இந்தியா ஒரு ஜனநாயகத்தில் உறுதியுள்ள நாடு. மற்ற நாடுகள் அப்படிப்பட்டவை அல்ல. நமது பொருளாதாரம் உச்ச வேகத்தில் சென்றது. மற்ற நாடுகள் அப்படியல்ல. ஆனால் அந்த வளர்ச்சி நமது குடிமகன்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.மனித வளர்ச்சி அளவுகோல் அறிக்கையில் உள்ள பாலியல் சமத்துவமின்மை அளவுகோலானது பெண்களின் நிலையை அளவிடுவதற்காக மூன்று முக்கிய வரையறைகளை முன்வைக்கிறது. அவை மகப்பேறுஆரோக்கியம், பெண்களை அதிகாரப்படுத்துதல் மற்றும் தொழிலாளர் சந்தையில்அவர்களின் பங்கேற்பு ஆகியவற்றி னைக் கொண்டு ஒரு சமூகம் பலவீனமானவர்களை எப்படி நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ள உதவும். இந்த விசயத்தில் இலங்கை 75 விழுக்காடும் நேபாளம் 98 விழுக்காடும் பூடான் 102 விழுக்காடும் மற்றும் வங்கதேசம் 115 விழுக்காடும் நம்மை விட முன்னேறிய நிலையில் உள்ளன. நமது நாடும் பாகிஸ்தானும் ஒரே நிலையில் 127வது, இடத்தில் உள்ளோம்.
குற்றவியல் நடைமுறைச்சட்டத்திருத்தம் பெண்களை பாதுகாக்க பெரிய அளவிலான நடவடிக்கைகளை கொண்டிருந்தாலும் இரண்டு ஆண்டுகளாகியும் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.தேசிய மனித உரிமை ஆணையத்தில் நான் பணியாற்றிய ஐந்து ஆண்டுகளும் ஒரு அடக்கமான அனுபவமாகும். கடந்த 2009ல் எங்களுக்கு 82000 புகார்கள் வந்தன. 2013ல் ஒரு லட்சம் புகார்கள் வந்தன. மொத்தம் ஐந்து உறுப்பினர்களையே கொண்டஒரு ஆணையம் இத்தகைய எண்ணிக்கை யிலான புகார்களில் ஒரு சிறு அளவு கூட விசாரித்து முடிக்க இயலாது. முதலில் 60 விழுக்காடு புகார்களை தள்ளுபடி செய்தோம். 11 விழுக்காடு புகார்களுக்கு அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. (ஆனால் அவர்கள் அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துகின்றனரா என்பதை பரிசோதிக்கவில்லை) 6 விழுக்காடு புகார்களை மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பினோம். இதில் அந்த ஆணையங்களும் சீர்குலைந்த நிலையில் உள்ளன என்பது கவனிக்க வேண்டிய விசயமாகும்.நாங்கள் விசாரணைக்காக கிராமப்புறங்களுக்கு சென்றபோது அவை இருளில் தள்ளப்பட்டுள்ளதை புரிந்து கொள்ள முடிந்தது.
எங்களுக்கு வந்த புகார்கள் அங்கு நிலவும் உண்மையின் மிகச்சிறிய பகுதியே. தண்ணீரில் மிதக்கும் ஐஸ் கட்டியின் மேல்பகுதி வெளியே தெரிவது போன்று சிறிய பகுதியாகும். உண்மையில் ஏராளமானவை அடியில் மறைந்து கிடப்பவையாகும். அதிகமான படிப்பறிவு இல்லாதவர்கள் உள்ள ஒரு நாட்டில் மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்களுக்கே தேசிய மனித உரிமை ஆணையம் இருப்பது தெரியும் என்பதே ஒரு பயங்கரமான மனித உரிமை மீறலாகும். அது உதவ முடியுமா என்பதே சிலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பலர் அதனால் உதவ முடியாது என்று கருதுகின்றனர். எங்களிடம் ஒரு புகார் வந்தால் நூற்றுக்கணக்கான புகார்கள் வருவதில்லை என்றேஅர்த்தம் கொள்ள முடியும். ஆனால் வந்தபுகார்கள் யாவுமே இந்த அரசியல் மற்றும் சமூக அமைப்புரீதியான பிரச்சனைகளாகும். அவை மொத்த சமூகத்தினையும் பாதிக்கக்கூடியதாகும். அந்த புகார்கள் இந்தியாவில் உள்ள பாகுபாட்டின் தன்மையையும் உரிமை பறிப்பின் ஆழத்தையும் வெளிக் கொண்டு வருபவை. பாகுபாடு, உரிமை பறிப்பு ஆகிய இரண்டும் பின்னிப்பிணைந் தவை. இந்தப்பின்னணியில்தான் புதிய ஆட்சி குறித்து நாம் கவலை கொள்ள வேண்டியதாக உள்ளது. இந்த ஆட்சியில் மிகவும் ஏழையாக இருக்கக்கூடியவர்கள் பழங்குடியினர் மற்றும் தலித் மக்கள் மற்றும்முஸ்லிம்கள் ஆகியோர் துயரப்படப்போகின்றனர். ஏனெனில் அவர்களுக்கு எதிரான இந்துமத நம்பிக்கை அடிப்படையிலான சமூக பாரபட்சம் ஆழமாக வேர் கொண்டுள்ளது. அது இன்னும் வலிமையாக உள்ளது.
அவர்களை காப்பாற்றுவதற்கான சட்டங்கள் மலட்டுத்தன்மையுள்ளவையாக உள்ளன. மதச்சார்பின்மை உள்ள அரசின் கீழ் உள்ள அரசு ஊழியர் கூட தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இச்சட்டங்களை நிறைவேற்றினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று சொல்லக்கூடும். தற்போதைய அபாயம் என்னவெனில் வெளிப்படையாகவே இந்து மத சார்புடையதாக காட்டிக்கொள்ளும் ஒரு அரசில் இந்த பாகுபாடு மற்றும் உரிமை பறிப்பு நடைமுறைகள் மேலும் அதிகமாக வெளிப்படும். தற்போதைய அமைச்சர்களின் வெறுப்பு பேச்சுக்கள் எங்கு இட்டுச் செல்கின்றன என்பதை காட்டுகின்றன.மோடி தனது கட்சியினர் பேசுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் இவை காவியின் ஐம்பது நிறங்களாக உள்ளன. அவை உரத்து கடுங்குரலில் பேசுகின்றன. அரசு ஊழியர்கள் நுட்ப உணர்வுடன் இருக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார். ஆனால் அவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கேற்ப நுட்ப உணர்வுடன் எப்போதும் இருக்கின்றனர். மோடி போலீஸ் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆம் அவர்கள் எப்போதும் புத்திசாலித்தனமாகவே இருக்கின்றனர். அவர்கள் தேசிய மனித உரிமைஆணையத்திடம் புகார் செய்யும் போது போலீசாரினால் இரண்டு சம்பவங்களில்தான் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்று கூறியுள்ளனர். ஆனால் அதே ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையத்தினால் பெறப்பட்ட 33,753 புகார்களில் மூன்றில் ஒரு பகுதி போலீசாருக்கு எதிரானது ஆகும். அந்த புகார்கள் போலீசார் எப்படி அவர்களால் பாதுகாக்கப்பட வேண்டியவர்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளன. இதிலிருந்துமோடி தன்னை தற்காத்துக் கொள்ள செய்தவாதம் என்னவெனில், இந்த பிரச்சனைகள் எல்லாம் அவர் உருவாக்கியதில்லை முந்தைய ஆட்சியிலிருந்து சுவீகரித்துக் கொண்டவை என்கிறார். ஆனால் அவர் கூறுவதற்கு நேர்மாறாக குஜராத் ஒரு முன்மாதிரியாக இந்தியா முழுமைக்குமாக நிற்கிறது.
குஜராத் மக்களின் வாழ்க்கை குறித்து பாரபட்சமில்லாத அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2013ல் லான்சர் ஆய்வு, இந்தியாவின் 11 செல்வந்த மாநிலங்களில் குஜராத் மட்டுமே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்புவிகிதத்தை குறைப்பதில் மிகவும் மோசமானநிலையில் உள்ளது என்று கூறியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் பாலின விகிதம் 1991ல் 1000 ஆண்குழந்தைகளுக்கு 934 பெண் குழந்தைகள் என்று இருந்தது. 2001ல் 920ஆக குறைந்தது. 2011ல் 918ஆக குறைந்து விட்டது. தேசிய குற்றப்பதிவு அமைப்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்பது வியக்கத்தக்கது அல்ல. அது போல மற்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்களான மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை விட தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. காத்மண்டுவில் மோடி ஏழைகளின் மீது கரிசனத்துடன் என்னதான் கூறியிருந்தாலும் அவரது பார்வையானது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியின் மீதுதான் இருந்தது. அவரே கூறிய எந்த நம்பிக்கையுமின்றி வாழும் லட்சக்கணக்கான மக்களின் மீதல்ல. இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்பது அவரது முதன்மையான குறிக்கோளாக இருக்கிறது. தற்போது வெளிப்படும் குறியீடுகள் எல்லாம் வரப்போகின்ற துயர்களை உணர்த்துகின்றன. சில வாரங்களுக்கு முன்னதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில் அதிபர்களின் கூட்டமைப்பு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
அந்த விளம்பரத்தில் பழமையான சட்டங்களை நீக்குவது இன்றைய நவீன காலகட்டத்தின் தேவை என்று கூறியிருந்தது. அதன்படி அந்தகூட்டமைப்பு 105 சட்டங்களை மறு பரிசீலனை செய்வதற்காக அடையாளங்கண்டுள்ளது. இவற்றை நீக்குவது இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்ற மோடியின் இலக்குகளை சாத்தியப்படுத்த முடியும். இந்த சட்டங்களில் மனித உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம்,வன உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், மாநிலங்களிடையே இடம் பெயர்ந்தோர் சட்டம், குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் மற்றும் குறைந்த கூலி சட்டம் ஆகியவை உள்ளிட்டு தொழிலாளர் நலத்தை பாதுகாக்கும் சட்டங்கள் ஆகியவை உள்ளடங்கும். மோடி இது போன்ற குரல்களுக்கு செவிமடுத்தால் வளர்ச்சி என்பதற்கு கொடூரமான விலை கொடுக்க வேண்டியிருக்கும்.இந்திய அரசுகள் இதுவரை மனிதநேய முகத்தோடுதான் வளர்ச்சியை கொண்டு சென்றுள்ளன. சந்தை சக்திகள் எவரை யெல்லாம் கடுமையாக தாக்கியதோ அப்போதெல்லாம் பல்வேறு விரிந்த அளவிலான சமூக நலத்திட்டங்கள் அவர்களைக் காத்து வந்துள்ளன. ஆனால் இவை பெரிய அளவிலான பிரச்சனைகளோடு இணைந்திருந்தன. உதாரணமாக கிராமப்புற வேலை உத்தரவாத திட்டங்களுக்கு எந்த பொருட்களும் சென்றதில்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டங்களுக்கான பட்ஜெட்டை விட 20 விழுக்காடுஅதிகமாக பொருட்களுக்கான செலவுகள் இருந்து வருகின்றன. தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆய்வு ஒன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 60 விழுக்காடு திருடப்பட்டுள்ளது என்று கூறுகிறது.
இந்த பட்டியல் முடிவில்லாமல் தொடர்கிறது. இதற்கான பதில் இந்த திட்டங்களை முடக்குவதல்ல. இத்திட்டங்களை மேலும் சிறப்பான முறையில் செயல்பட வைப்பதே ஆகும். இது போன்ற திட்டங்களின்றி கிராமப்புற இந்தியா வெற்றிடமாகத்தான் இருக்கும். அங்கு ஒன்றுமே இருக்காது. நமது பிரதமரின் புகழ் பரப்பிகள் சர்தார் வல்லபாய் பட்டேலின் ஆன்மா மோடியின் மீது இறங்கியுள்ளது என்று நம்புகின்றனர்.

வல்லபாய் பட்டேல் இந்தியாவை உருவாக்கினார். நரேந்திர மோடி அதற்கு எதிரான வேலையை செய்து வருகிறார். ஆனால் நிறைய திறன்கள் கண்ணியம் மற்றும் திறமைகளைக்கொண்டு நமது பிரதமரும் இந்தியாவை உருவாக்கலாம். நாம் அனைவ்ரும் பெருமைப்படும் இந்தியாவை உருவாக்கலாம். அதுதான் வல்லபாய் பட்டேலின் லட்சியங்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். அதற்கு மாறாக அவரின் பிரம்மாண்டமான சிலையை கட்டியமைப்பதன் மூலமாக அல்ல.தமிழில் : சேது




‘எங்கும் லஞ்சம் என்றிருந்தால் - கட்டுமானம் மட்டும் எப்படித் தரமாக இருக்கும்?’ 


சத்தியபிரதா பால், தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் காவியின் பன்முகங்கள் கடந்த டிசம்பர் 11ம்தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்தபடி ஐநா சபை ஜூன் 21ம்தேதியை சர்வதேச யோகா நாளாக ஏற்றுக் கொண்டது. அதை இந்தியா கொண்டாடியது. ஆனால் அதற்கு முந்தைய நாள் அவருடைய ஆட்சியின் கீழ் முதல் மனித உரிமை நாளாகும். அது கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.தெற்காசிய சார்க் மாநாட்டில் மோடி நாம் வளர்ச்சியை நோக்கி பாலங்களை அமைக்கும்போதே எந்த நம்பிக்கையும் இல்லாமல் வாழும் பல இலட்சக்கணக்கான மக்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் நமது பொறுப்பை விட்டு விடக்கூடாது என்று குறிப்பிட்டார். அவர் ஒரு ஒப்பிட முடியாத கதைசொல்லியாவார். அவர் மீது நம்பிக்கையுள்ளவர்களின் மனதில் அவர் கூறும் கதைகள் அப்படியே உண்மைகளாக பதிந்து விடும். அவருடைய நடிப்பில் எந்த குறையும் இருக்காது.1990ல் ஐநா மனித வளர்ச்சி அளவுகோல்அறிக்கையை மக்களே ஒரு தேசத்தின் உண்மையான சொத்து என்ற சவாலுக்குரிய கருத்தாக்கத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உண்மையில் நாம் வசதியானவர்கள்தானா? இருபது ஆண்டுகள் தேசியசராசரி உற்பத்திக்கு பின்னர் சார்க் அமைப்பை நாம் மிகப் பெரிய அளவில் பிளவுபடுத்துகிறோம். ஒரு புறம் கிழக்கு நோக்கி ஒரு கால் வைத்து சீனத்தை வெளியேற்ற முயற்சிக்கிறோம். மறுபுறம் மேற்குநோக்கி இன்னொருகால் வைத்து பாகிஸ்தானை கீழே தள்ளுகிறோம். குள்ளமானவர்கள் மத்தியில் ராட்சசனைப் போன்று நாம் நகருகிறோம். ஆனால் சமத்துவமான வளர்ச்சியை அளவிடும் அளவுகோலை வைத்துப்பார்க்கும்போது நமக்கும் நமது அண்டைய நாட்டவர்களுக்கும் இடையே தேர்வு செய்ய மிகக்குறைவான விசயங்களே உள்ளன. ஐநாவின் மனித வளர்ச்சி அளவுகோல் 2014ன்படி 187 நாடுகளின் வளர்ச்சி படி நிலை பட்டியலில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது. இலங்கை நம்மைவிட சற்று முன்னேறிய நிலையில் 73வது இடத்தில் உள்ளது. பூடான் நமக்கு மிக அருகில் 136வது இடத்திலும் நேபாளம் 145வது இடத்திலும் மற்றும் பாகிஸ்தான் 146வது இடத்திலும் உள்ளன. உண்மை என்னவெனில் இந்தியா ஒரு ஜனநாயகத்தில் உறுதியுள்ள நாடு. மற்ற நாடுகள் அப்படிப்பட்டவை அல்ல. நமது பொருளாதாரம் உச்ச வேகத்தில் சென்றது. மற்ற நாடுகள் அப்படியல்ல. ஆனால் அந்த வளர்ச்சி நமது குடிமகன்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.மனித வளர்ச்சி அளவுகோல் அறிக்கையில் உள்ள பாலியல் சமத்துவமின்மை அளவுகோலானது பெண்களின் நிலையை அளவிடுவதற்காக மூன்று முக்கிய வரையறைகளை முன்வைக்கிறது. அவை மகப்பேறுஆரோக்கியம், பெண்களை அதிகாரப்படுத்துதல் மற்றும் தொழிலாளர் சந்தையில்அவர்களின் பங்கேற்பு ஆகியவற்றி னைக் கொண்டு ஒரு சமூகம் பலவீனமானவர்களை எப்படி நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ள உதவும். இந்த விசயத்தில் இலங்கை 75 விழுக்காடும் நேபாளம் 98 விழுக்காடும் பூடான் 102 விழுக்காடும் மற்றும் வங்கதேசம் 115 விழுக்காடும் நம்மை விட முன்னேறிய நிலையில் உள்ளன. நமது நாடும் பாகிஸ்தானும் ஒரே நிலையில் 127வது, இடத்தில் உள்ளோம். குற்றவியல் நடைமுறைச்சட்டத்திருத்தம் பெண்களை பாதுகாக்க பெரிய அளவிலான நடவடிக்கைகளை கொண்டிருந்தாலும் இரண்டு ஆண்டுகளாகியும் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.தேசிய மனித உரிமை ஆணையத்தில் நான் பணியாற்றிய ஐந்து ஆண்டுகளும் ஒரு அடக்கமான அனுபவமாகும். கடந்த 2009ல் எங்களுக்கு 82000 புகார்கள் வந்தன. 2013ல் ஒரு லட்சம் புகார்கள் வந்தன. மொத்தம் ஐந்து உறுப்பினர்களையே கொண்டஒரு ஆணையம் இத்தகைய எண்ணிக்கை யிலான புகார்களில் ஒரு சிறு அளவு கூட விசாரித்து முடிக்க இயலாது. முதலில் 60 விழுக்காடு புகார்களை தள்ளுபடி செய்தோம். 11 விழுக்காடு புகார்களுக்கு அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. (ஆனால் அவர்கள் அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துகின்றனரா என்பதை பரிசோதிக்கவில்லை) 6 விழுக்காடு புகார்களை மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பினோம். இதில் அந்த ஆணையங்களும் சீர்குலைந்த நிலையில் உள்ளன என்பது கவனிக்க வேண்டிய விசயமாகும்.நாங்கள் விசாரணைக்காக கிராமப்புறங்களுக்கு சென்றபோது அவை இருளில் தள்ளப்பட்டுள்ளதை புரிந்து கொள்ள முடிந்தது. எங்களுக்கு வந்த புகார்கள் அங்கு நிலவும் உண்மையின் மிகச்சிறிய பகுதியே. தண்ணீரில் மிதக்கும் ஐஸ் கட்டியின் மேல்பகுதி வெளியே தெரிவது போன்று சிறிய பகுதியாகும். உண்மையில் ஏராளமானவை அடியில் மறைந்து கிடப்பவையாகும். அதிகமான படிப்பறிவு இல்லாதவர்கள் உள்ள ஒரு நாட்டில் மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்களுக்கே தேசிய மனித உரிமை ஆணையம் இருப்பது தெரியும் என்பதே ஒரு பயங்கரமான மனித உரிமை மீறலாகும். அது உதவ முடியுமா என்பதே சிலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பலர் அதனால் உதவ முடியாது என்று கருதுகின்றனர். எங்களிடம் ஒரு புகார் வந்தால் நூற்றுக்கணக்கான புகார்கள் வருவதில்லை என்றேஅர்த்தம் கொள்ள முடியும். ஆனால் வந்தபுகார்கள் யாவுமே இந்த அரசியல் மற்றும் சமூக அமைப்புரீதியான பிரச்சனைகளாகும். அவை மொத்த சமூகத்தினையும் பாதிக்கக்கூடியதாகும். அந்த புகார்கள் இந்தியாவில் உள்ள பாகுபாட்டின் தன்மையையும் உரிமை பறிப்பின் ஆழத்தையும் வெளிக் கொண்டு வருபவை. பாகுபாடு, உரிமை பறிப்பு ஆகிய இரண்டும் பின்னிப்பிணைந் தவை. இந்தப்பின்னணியில்தான் புதிய ஆட்சி குறித்து நாம் கவலை கொள்ள வேண்டியதாக உள்ளது. இந்த ஆட்சியில் மிகவும் ஏழையாக இருக்கக்கூடியவர்கள் பழங்குடியினர் மற்றும் தலித் மக்கள் மற்றும்முஸ்லிம்கள் ஆகியோர் துயரப்படப்போகின்றனர். ஏனெனில் அவர்களுக்கு எதிரான இந்துமத நம்பிக்கை அடிப்படையிலான சமூக பாரபட்சம் ஆழமாக வேர் கொண்டுள்ளது. அது இன்னும் வலிமையாக உள்ளது. அவர்களை காப்பாற்றுவதற்கான சட்டங்கள் மலட்டுத்தன்மையுள்ளவையாக உள்ளன. மதச்சார்பின்மை உள்ள அரசின் கீழ் உள்ள அரசு ஊழியர் கூட தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இச்சட்டங்களை நிறைவேற்றினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று சொல்லக்கூடும். தற்போதைய அபாயம் என்னவெனில் வெளிப்படையாகவே இந்து மத சார்புடையதாக காட்டிக்கொள்ளும் ஒரு அரசில் இந்த பாகுபாடு மற்றும் உரிமை பறிப்பு நடைமுறைகள் மேலும் அதிகமாக வெளிப்படும். தற்போதைய அமைச்சர்களின் வெறுப்பு பேச்சுக்கள் எங்கு இட்டுச் செல்கின்றன என்பதை காட்டுகின்றன.மோடி தனது கட்சியினர் பேசுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் இவை காவியின் ஐம்பது நிறங்களாக உள்ளன. அவை உரத்து கடுங்குரலில் பேசுகின்றன. அரசு ஊழியர்கள் நுட்ப உணர்வுடன் இருக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார். ஆனால் அவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கேற்ப நுட்ப உணர்வுடன் எப்போதும் இருக்கின்றனர். மோடி போலீஸ் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆம் அவர்கள் எப்போதும் புத்திசாலித்தனமாகவே இருக்கின்றனர். அவர்கள் தேசிய மனித உரிமைஆணையத்திடம் புகார் செய்யும் போது போலீசாரினால் இரண்டு சம்பவங்களில்தான் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்று கூறியுள்ளனர். ஆனால் அதே ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையத்தினால் பெறப்பட்ட 33,753 புகார்களில் மூன்றில் ஒரு பகுதி போலீசாருக்கு எதிரானது ஆகும். அந்த புகார்கள் போலீசார் எப்படி அவர்களால் பாதுகாக்கப்பட வேண்டியவர்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளன. இதிலிருந்துமோடி தன்னை தற்காத்துக் கொள்ள செய்தவாதம் என்னவெனில், இந்த பிரச்சனைகள் எல்லாம் அவர் உருவாக்கியதில்லை முந்தைய ஆட்சியிலிருந்து சுவீகரித்துக் கொண்டவை என்கிறார். ஆனால் அவர் கூறுவதற்கு நேர்மாறாக குஜராத் ஒரு முன்மாதிரியாக இந்தியா முழுமைக்குமாக நிற்கிறது. குஜராத் மக்களின் வாழ்க்கை குறித்து பாரபட்சமில்லாத அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2013ல் லான்சர் ஆய்வு, இந்தியாவின் 11 செல்வந்த மாநிலங்களில் குஜராத் மட்டுமே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்புவிகிதத்தை குறைப்பதில் மிகவும் மோசமானநிலையில் உள்ளது என்று கூறியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் பாலின விகிதம் 1991ல் 1000 ஆண்குழந்தைகளுக்கு 934 பெண் குழந்தைகள் என்று இருந்தது. 2001ல் 920ஆக குறைந்தது. 2011ல் 918ஆக குறைந்து விட்டது. தேசிய குற்றப்பதிவு அமைப்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்பது வியக்கத்தக்கது அல்ல. அது போல மற்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்களான மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை விட தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. காத்மண்டுவில் மோடி ஏழைகளின் மீது கரிசனத்துடன் என்னதான் கூறியிருந்தாலும் அவரது பார்வையானது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியின் மீதுதான் இருந்தது. அவரே கூறிய எந்த நம்பிக்கையுமின்றி வாழும் லட்சக்கணக்கான மக்களின் மீதல்ல. இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்பது அவரது முதன்மையான குறிக்கோளாக இருக்கிறது. தற்போது வெளிப்படும் குறியீடுகள் எல்லாம் வரப்போகின்ற துயர்களை உணர்த்துகின்றன. சில வாரங்களுக்கு முன்னதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில் அதிபர்களின் கூட்டமைப்பு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் பழமையான சட்டங்களை நீக்குவது இன்றைய நவீன காலகட்டத்தின் தேவை என்று கூறியிருந்தது. அதன்படி அந்தகூட்டமைப்பு 105 சட்டங்களை மறு பரிசீலனை செய்வதற்காக அடையாளங்கண்டுள்ளது. இவற்றை நீக்குவது இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்ற மோடியின் இலக்குகளை சாத்தியப்படுத்த முடியும். இந்த சட்டங்களில் மனித உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம்,வன உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், மாநிலங்களிடையே இடம் பெயர்ந்தோர் சட்டம், குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் மற்றும் குறைந்த கூலி சட்டம் ஆகியவை உள்ளிட்டு தொழிலாளர் நலத்தை பாதுகாக்கும் சட்டங்கள் ஆகியவை உள்ளடங்கும். மோடி இது போன்ற குரல்களுக்கு செவிமடுத்தால் வளர்ச்சி என்பதற்கு கொடூரமான விலை கொடுக்க வேண்டியிருக்கும்.இந்திய அரசுகள் இதுவரை மனிதநேய முகத்தோடுதான் வளர்ச்சியை கொண்டு சென்றுள்ளன. சந்தை சக்திகள் எவரை யெல்லாம் கடுமையாக தாக்கியதோ அப்போதெல்லாம் பல்வேறு விரிந்த அளவிலான சமூக நலத்திட்டங்கள் அவர்களைக் காத்து வந்துள்ளன. ஆனால் இவை பெரிய அளவிலான பிரச்சனைகளோடு இணைந்திருந்தன. உதாரணமாக கிராமப்புற வேலை உத்தரவாத திட்டங்களுக்கு எந்த பொருட்களும் சென்றதில்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டங்களுக்கான பட்ஜெட்டை விட 20 விழுக்காடுஅதிகமாக பொருட்களுக்கான செலவுகள் இருந்து வருகின்றன. தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆய்வு ஒன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 60 விழுக்காடு திருடப்பட்டுள்ளது என்று கூறுகிறது. இந்த பட்டியல் முடிவில்லாமல் தொடர்கிறது. இதற்கான பதில் இந்த திட்டங்களை முடக்குவதல்ல. இத்திட்டங்களை மேலும் சிறப்பான முறையில் செயல்பட வைப்பதே ஆகும். இது போன்ற திட்டங்களின்றி கிராமப்புற இந்தியா வெற்றிடமாகத்தான் இருக்கும். அங்கு ஒன்றுமே இருக்காது. நமது பிரதமரின் புகழ் பரப்பிகள் சர்தார் வல்லபாய் பட்டேலின் ஆன்மா மோடியின் மீது இறங்கியுள்ளது என்று நம்புகின்றனர். வல்லபாய் பட்டேல் இந்தியாவை உருவாக்கினார். நரேந்திர மோடி அதற்கு எதிரான வேலையை செய்து வருகிறார். ஆனால் நிறைய திறன்கள் கண்ணியம் மற்றும் திறமைகளைக்கொண்டு நமது பிரதமரும் இந்தியாவை உருவாக்கலாம். நாம் அனைவ்ரும் பெருமைப்படும் இந்தியாவை உருவாக்கலாம். அதுதான் வல்லபாய் பட்டேலின் லட்சியங்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். அதற்கு மாறாக அவரின் பிரம்மாண்டமான சிலையை கட்டியமைப்பதன் மூலமாக அல்ல.தமிழில் : சேது மார்க்சிஸ்ட் கட்சியின் சாதாரண ஊழியன் நான் - நாங்கள் போனதும் தன்னை இப்படி அறிமுகப்படுத்திக் கொண்டார் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி.யான டி.கே.ரங்கராஜன்.சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மாடியில் தனியறையில் `துக்ளக்’ வாசகர்களுடன் உரையாடல் ஆரம்பிக்கிறது. வாசகர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். வழக்கறிஞரான ஏ.எஸ்.அழகுராஜா, முதுநிலைப் பொறியாளரான டாக்டர் எஸ்.வெங்கடேஷ், தமிழிசைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரான க.செந்தில் ராஜா, மார்க்கெட்டிங் ஆலோசகரான பி.ஏ.சேதுராமன், ஃப்ரீலேன்ஸ் பத்திரிகையாளரான முரளி கிருஷ்ணன் என்று ஐந்து பேர். ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நீண்ட உரையாடல் - சமீபத்தில் சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த மோசமான விபத்து குறித்த பேச்சுடன் துவங்குகிறது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் சீமாந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மௌலிவாக்கம் விபத்தைப் பார்வையிட வந்தபோது, அங்கு சென்றிருந்தார் டி.கே.ரங்கராஜன், உரையாடல் நடந்த போது 58 சடலங்கள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தன. மௌலிவாக்கத்தின் மரண நெடி உரையாடலையும் கனத்த மௌனத்துடன் துவக்க வைத்தது. அந்த அனுபவத்தை முதலில் வாகர்களிடம் பகிர்ந்து கொண்டார் ரங்கராஜன்.
“அந்த இடத்திற்குப் போயிருந்தபோது பார்க்கக் கஷ்டமாக இருந்தது. அந்த இடத்தில் அஸ்திவாரம் போட்டதில் இருந்தே பிரச்சனை. நீர் வளம் நிறைந்த பகுதியின் கீழ்ப் பகுதியில், பாறைப்பகுதி வரை அஸ்திவாரத்தைப் போட்டிருக்க வேண்டும். ஆனால், அங்கு கீழே களிமண் பகுதிதான் அதிகமாக இருந்திருக்கிறது. அதில் அஸ்திவாரம் போட்டால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட இடத்தில் இவ்வளவு அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்ட எப்படி அனுமதி கொடுத்தார்கள்?ஏதோ ஒரு அவசர கோலத்தில் கட்டியிருக்கிறார்கள். ஏதோ இடி விழுந்து கட்டிடமே உடைந்துவிட்டது என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மையல்ல. எந்தவொரு கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் போது, பள்ளம் தோண்டும் போதிருந்தே ஒவ்வொரு கட்டிடத்திற்கும் யாருக்காவது பணம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. முகமது பின் துக்ளக் - நாடகத்தில் வருகிற மாதிரிதான் அரசு அதிகாரிகள் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் வேலையே நகர்கிறது. இப்படி எங்கும் லஞ்சம் என்றிருக்கும்போது கட்டுமானம் மட்டும் எப்படித் தரமாக இருக்கும்? அதுதான் மவுலிவாக்கத்திலும் நடந்திருக்கிறது.மீட்புப்பணி நன்றாக நடந்திருக்கிறது. சிரத்தையுடன் பலரை மீட்டிருக்கிறார்கள். பணம் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்றுதான் கட்டுமானத் தொழில் பற்றி எந்த ஞானமும் இல்லாதவர்கள் இதில் இறங்கியிருக்கிறார்கள். எதிர்காலத்திலாவது வீடு வாங்கப் பணம் கட்டுகிறவர்கள், அது எப்படிக் கட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். அதில் ஒரு வெளிப்படைத் தன்மை வேண்டும். இனியாவது இம்மாதிரியான அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்கும் அரசு அதிகாரிகள் மனசாட்சியுடன் அனுமதி அளிக்க வேண்டும்.
செந்தில் ராஜா: நீங்கள் சொல்கிற மாதிரி பார்த்தால் - தொழில் தெரிந்தவர்கள்தான் அந்தந்தத் தொழிலில் இறங்க வேண்டும் என்றால், நாம் குலத் தொழில் முறையை ஊக்குவிக்கிக்கிற மாதிரி ஆகிவிடாதா?
டி.கே.ரங்கராஜன்: குலத் தொழிலே இதில் கிடையாது. நாம் அதை ஆதரிக்கவும் இல்லை. ஆதரிக்கவும் மாட்டோம். இன்றைக்கு உயர்ந்ததொழிலில் இருக்கிறவர்கள் ஜாதி வலிமையினாலா அதில் இருக்கிறார்கள்? நான் இதை ஜாதிரீதியாகப் பார்க்க வில்லை. முதலாளித்துவத்தின் ஒரு கூறாகப் பார்க்கிறேன். இப்போது யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்யலாம். செய்ய முடியும். அனைவரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டம் வந்து விட்டபிறகு குலம் எங்கே இருக்கிறது?
எஸ்.வெங்கடேஷ்: இந்த விபத்தில் பல மாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த மாதிரியான தொழிலாளர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? விபந்து நடந்தால் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதற்கான உத்தரவாதமாவது உண்டா? வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு உழைக்க லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருகிறார்கள். அவர்களுக்கென ஏதாவது ஒரு அமைப்பு இருக்கிறதா?
டி.கே.ரங்கராஜன்: வெளி மாநிலங்களில் இருந்து கட்டிடத் தொழிலுக்காக இங்கு வருகிற தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் கரும்பு வெட்டுவதற்குக் கூட வெளிமாநிலங்களில் இருந்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு வந்தார்கள். திருப்பூரில் பணியாற்ற வெளி மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வருகிறார்கள். இதுதவிர, இங்கிருந்து வெளிநாடுகளுக்குப் போகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.கிரீஸூக்கு நான் போயிருக்கிறபோது, பங்களாதேஷிலிருந்து அங்கு வந்திருந்த தொழிலாளர்கள் இருபதாயிரம் பேர் என்று சொன்னார்கள். இப்படி தொழிலாளர்கள் மாநில,நாடுகளின் எல்லைகளைக் கடந்து பிழைக்கப் போவது நடக்கிறது. தமிழக அரசு தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வருகிறவர்களை ஒழுங்குபடுத்த ஒரு அலுவலகத்தை உருவாக்கி, அதன் மூலம் அவர்களுக்குத் தனி அடையாளத்தைத் தர ஏற்பாடு செய்ய வேண்டும். இப்படி வந்து பல ஆபத்தான பணிகளில் ஈடுபடுகிற தொழிலாளர்களுக்கு, முறையான இன்சூரன்ஸ் வசதி இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
முரளி கிருஷ்ணன்: சாதாரணமானவர்களுக்கு வங்கியில் கடன் கிடைப்பதற்குப் பலதரப்பட்ட சிக்கல்கள் இருக்கும் போது, மௌலிவாக்கத்தின் அந்தக் கட்டிட உரிமையாளர் வெற்று இடத்தைக் காட்டி எப்படி ஆறரைக் கோடி ரூபாயைப் பெறமுடிந்தது? 2005ல் இதே மாதிரி கட்டுமானப் பணியில் ஒரு விபத்து நடந்து தொழிலாளர்கள் சிலர்இறந்து போனார்கள். அதற்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டது என்றே தெரியவில்லை. இதில்தொடர்ந்து பாதிக்கப்படுவது தொழிலாளர்களாகத் தானே இருக்கிறார்கள்?
டி.கே.ரங்கராஜன்: சாதாரணமானவர்களுக்குக் கடன் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் இப்போது மட்டுமல்ல. அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடக்கிறது. பல முதலாளிகள் சுலபமாகக் கடன் வாங்க முடிந்திருக்கிறது. கூடுதலான கடனை வங்கியிடமிருந்து வாங்க வேண்டுமானால், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து விட்டால் கடனை அவர்களால் வாங்கிவிட முடிகிறது. இங்கும் அப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. பல கட்டுமான நிறுவனங்களில் இப்படிப்பட்ட விபத்துக்கள் நடப்பதைத் தடுக்கக் கண்காணிப்பாளர்கள் இருக்கிறார்கள். இருந்தும் அதையும் மீறி விபத்துக்கள் நடக்கும்போது தொழிலாளர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். சமூகப் பொறுப்பாக இதை யாரும் பார்க்காததால் வருகிற பிரச்சனைகள் இவை.
சேதுராமன்: நம்முடைய கட்டுமானத்தின் உறுதிக்கு இன்றைக்கும் காலம் கடந்த சாட்சியங் களாக தஞ்சைப் பெரிய கோவில் இருக்கிறது. கல்லணை இருக்கிறது. ஆனால் இன்றைக்குக் கட்டப்பட்ட சில மாதங்களுக்குள் சென்னை விமானநிலையத்தின் கூரை விழுகிறது. மௌலிவாக்கம் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இன்றைக்குஏன் குறைந்த கால அளவுக்குக் கூடத் தாக்குப்பிடிக் காத விதத்தில் கட்டுமானம் இருக்கிறது?
டி.கே.ரங்கராஜன்: ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலோ, அதற்கு முன் கட்டப்பட்ட கல்லணையோ வறட்சிக் காலத்தில தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கிற நோக்கத்திலும் உருவாக்கப்பட்டவை. அதில் சமூக நோக்கமும் இருந்தது.அதைவிட சமூகத்தில் ஒரு நாணயம் இருந்தது. செய்கிற வேலையில் ஈடுபாடும், நேர்மையும் இருந்தது. இன்றைக்கு அவை எல்லாம் பின்னுக்குப் போய், எப்படியாவது தான் மட்டும் பணம் சம்பாதித்து விட்டால்போதும் என்கிற நோக்கம் வந்துவிட்ட பிறகு, இப்படிப்பட்ட கட்டுமானங்கள் நடக்கின்றன. தரமில்லாமல் கட்டப்படுகின்றன. அதனால் குறுகிய காலத்தில் அவற்றில் தரம் இல்லை என்பது தெரிந்துவிடுகிறது. சரிந்து விழுகின்றன.காரல் மார்க்ஸ் தன்னுடைய மூலதனம் பற்றிய புத்தகத்தில்- முதலாளிகளைப் பற்றி ஒன்றைச் சொல்லியிருப்பார். தனக்கு பத்து சதவிகித லாபம் கிடைக்கும் என்று தெரிந்தால் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யத் தயாராக இருக்கும் வர்க்கம். சாராயமோ, வர்த்தகமோ பாகுபாடு பார்க்காது. முப்பது சதவிகிதலாபம் கிடைக்கும் என்றால் அது வெறிபிடித்த நாயைப் போல எதையும் செய்யத் துணிந்துவிடும். இன்னும் கூடுதலாக லாபம் கிடைக்கும் என்றால், ஒரு நாட்டில் இருக்கிற சட்டங்களைக் கூட மாற்றிவிடும். அதை நியாயப்படுத்தி அதற்கான காரணங்களைப் பொருத்த மாகச் சொல்லி, மக்களையும் ஏற்றுக் கொள்ள வைக்கும். அரசாங்கத்தை மாற்றும். அரசியல் சட்டத்தை மாற்றும். மார்க்ஸ் சொன்ன விஷயம் இன்றைக்கும் எப்படியெல்லாம் பொருந்துகிறது பாருங்கள்! இதில் முதலாளிகளின் தரப்பு லாபத்தை மட்டுமே பார்க்கிறது. பாதிக்கப்படுகிறவர்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.
எஸ்.வெங்கடேஷ்: முன்பு தொழிலாளர் நலனுக்காகப் பல சட்டங்கள் இருந்தன. கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் போன்றவை எல்லாம் இருந்தன. இப்போது கார்ப்பரேட் யுகம். அந்த செக்டாரில் ஏராளமான இளைஞர்கள் வேலை பார்க்கிறார்கள். இருந்தும் அவர்களுக்கு நிறைய மன அழுத்தங்கள் இருக்கின்றன. வேலையில் பாதுகாப்பு என்பதே இல்லை. குறைந்த பட்சம் தொழிற்சங்கம் பற்றி அவர்கள் பேசக் கூட முடியாது. அந்தத்துறையில் கம்யூனிஸ்ட்டுகள் எந்தளவுக்கு கவனம் செலுத்தி யிருக்கிறார்கள்?
டி.கே.ரங்கராஜன்: தொழிற்சங்கம் என்றாலேகம்யூனிஸ்ட்டுகள் தான் என்று நினைத்துவிட வேண்டியதில்லை. கம்யூனிஸ்ட்டுகள் அல்லாத வெவ்வேறு கட்சி சார்ந்த தொழிற்சங்கங் கள் நிறைய இருக்கின்றன. தொழிலாளர்கள் தங்களுக்குள் கூடி ஒரு தலைமையைத் தேர்ந்தெடுப்பதுதான் தொழிற்சங்கம். தொழிலாளர்களு டைய நலன்கள் பாதுகாக்கப்படுகிறதா, அவர்களுக்கான சட்டங்கள் சரிவர அமல்படுத்தப்படுகிறதா என்பதை எல்லாம் கவனிப்பது தொழிற்சங்கங்களின் வேலை. ஆனால், இன்றைக்கு இருக்கிற கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்கள் தொழிற்சங்கத் தைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.அந்நிய மூலதனம் இந்தியாவுக்குள் வரக்கூடாது என்கிற கொள்கை எங்களுக்கு இல்லை. இங்குள்ள தொழிலாளர்களுக்குக் கூடுதலான வாய்ப்பைக் கொடுக்கிற தொழிலாக இருந்தால் இங்கு அந்நிய முதலீடு வருவதில் தப்பில்லை. ஃபோர்டு, ஹூண்டாய் நிறுவனங்கள் வந்ததை நாங்கள் ஆட்சேபிக்கவில் லை. ஆனால் ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கிற சென்னை விமான நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கோ, பிரிட்டிஷ் நிறுவனத்திற்கோ விற்று விடாதீர்கள் என்பதைத்தான் அழுத்தமாகச் சொல்கிறோம். வெளிநாட்டு நிறுவனங் கள் இங்கு வருகிறபோது இங்குள்ள மாநில அரசிடம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் போடுகிறார்கள். அதில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குச் சலுகைகளைக் கேட்கிறார்கள்.தடையில்லா மின்சாரம் கேட்கிறார்கள். குடிநீரைக் கேட்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் தாங்கள் எதிர்பார்த்த லாபத்தை எடுத்துவிட்டால் உடனடியாக வெளியேறி விடுகிறார்கள். அதில் வேலை பார்த்த ஊழியர்களை வெளியே அனுப்பி விடுகிறார்கள். இப்படிப் பல நிறுவனங்கள் செய்கிற போது எந்தஅரசும் அவற்றைத்தட்டிக்கேட்பதில்லை. இதனால் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறி போய்க் கொண்டிருப்பது தொடர்ந்து கொண்டிருக்கும். இது தான் நவீன தாராளமயம்.
முரளி கிருஷ்ணன்: இதெல்லாம் ஒரு விதத்தில் நவீன அடிமைத்தனம்தானே?
டி.கே.ரங்கராஜன்: இன்றைக்கு இருப்பது உலக மூலதனம். இது எந்த நாட்டில் கால்பதிக்கிறதோ, அந்த நாடுகளின் அரசியலைமாற்றிக் கொண்டே இருக்கும். அது தொழிலாளர்கள் நலனைப் பொருட்படுத்துவதில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் இங்குள்ள எந்த நீதிமன்றங்களில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எத்தனை தீர்ப்புகள் வந்திருக்கின்றன? கணக்கெடுத்துப் பாருங்கள். அரசின் பொருளாதாரக் கொள்கை என்பதே தனியார் மயத்தை ஊக்குவிக்கும் விதத்திலும், வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கும், தானே இருக்கின்றன. இதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா என்கிற வித்தியாசங்கள் எல்லாம் இல்லை.
சேதுராமன்: அந்நிய முதலீடு பற்றி நீங்கள் பேசுகிறபோது இதைக்கேட்க வேண்டியிருக்கிறது. குஜராத்தில் நிறைய அந்நிய முதலீடுகள் குவிந்திருக்கின்றன. அதை வைத்துத்தான் அங்குதேர்தல் விளம்பரமே நடந்தது. அங்கு தொழி லாளர்கள் பாதிக்கப்படாமல் நன்றாகத்தானே இருக்கிறார்கள்?
டி.கே.ரங்கராஜன்: குஜராத்தில் நீங்கள்சொல்கிற அந்நிய முதலீடு செய்யப்பட்டிருக்கிற பல நிறுவனங்களின் கதி என்ன என்பதைப்பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறோம். படியுங்கள். நான் பல தொலைக்காட்சி களில் இதுபற்றி நிறையப் பேசியிருக்கிறேன். மோடி அரசு எந்த வெளிநாட்டு மூலதனத்தை ஈர்த்திருக்கிறது? அந்நிய முதலீட்டைக் கொண்டு வரும் முதலாளிகளுக்கு அத்தனை சலுகைகளையும் கொடுத்து விடுகிறார்கள். 90க்குப் பிறகு பழைய தொழிற்கொள்கை இந்தியாவில் கிடையாது. மாநிலங்கள் எவ்வளவு தூரம் கூடுதலான சலுகைகளைக் கொடுத்து அந்நிய முதலீட்டை ஈர்க்க முடியுமோ, அதை எல்லாம் செய்கின்றன. மோடியும் குஜராத்தில் அதைத்தான் செய்தார்.மேற்கு வங்கத்தில் இருந்து டாடா ஏன் குஜராத்துக்கு ஓடுகிறார்? காரணம், அந்தளவுக்கு அவருக்குச் சலுகைகள் தரப்பட்டன. தயவு செய்து உங்களைப் போன்ற உண்மை விரும்பிகள் குஜராத்துக்குப் போய்ப் பாருங்கள். அப்போதுதான் அங்கு எவ்வளவு விவசாய நிலங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன? விவசாயிகளுக்கு அதற்கு ஈடாக என்ன கொடுக்கிறார் கள்? அங்கு குறைந்தபட்சக் கூலிச்சட்டம் அமலில் இருக்கிறதா? தொழிற்சாலைச் சட்டங்கள் அமலில் இருக்கிறதா? இந்த மாதிரிப் பலவற்றை நேரில் பார்த்தால்தான் உணர முடியும்.ஆனால், இதையெல்லாம் எடுத்துச் சொல்லி மக்களிடம் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு இடதுசாரித் தொழிற்சங்கங்கள் பலவீனமாக இருக்கின்றன. அவை பலவீனமாக இருக்கிறபோது `தம்பி சண்டப்பிரசண்டன்‘ மாதிரி ஆகிவிட்டது பாஜகவின் கூக்குரல்.
அழகுராஜா: 1952ல் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியமான எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறது. பிறகு வெளியிலிருந்து ஒரு அரசுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறது. இப்போது அகில இந்திய அளவில்கம்யூனிஸ்ட் கட்சி இந்த அளவுக்குச் சரிந்து போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
டி.கே.ரங்கராஜன்: இது ஒரு நல்ல கேள்விதான். மார்க்ஸியத் தத்துவம் என்பது விஞ்ஞானம். மார்க்ஸியம் என்பது உண்மை. அது மற்றதத்துவங்களைப் போல எப்போதும் அதே நிலையில் இருப்பதில்லை. காலமும், விஞ்ஞானமும் மாறுகிறபோது சமூக விஞ்ஞானமும் மாறும். அப்படி மாறுகிறபோது, புதிதாக வந்திருக்கக்கூடிய மத்தியதர வர்க்கம். இன்றைக்கு இருக்கிற இளைஞர்களின் எண்ணங்கள் - இவற்றை எல்லாம் புரிந்து கொள்வதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இன்னும் அனுபவம் போதவில்லை. அதைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. பாரதிய ஜனதா, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஊடகங்களைப் பயன்படுத்திய அளவுக்கு கம்யூனிஸ்டுகள் ஊடகங்களைப் பயன்படுத்தவில்லை. அதனால் நாங்கள் சொல்லக்கூடிய உண்மை குறைந்த விதத்தில் தான் மக்களிடம் போய்ச் சேருகிறது. இப்போது அதை நாங்கள் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.இருபது ஆண்டுகளுக்கு மேல் எங்களுடைய வாக்கு வங்கி சுருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம். உழைப்பாளி களின் எண்ணங்கள் கூட மாறியிருக்கின் றன. அவர்களுடைய தேவைகள் மாறியிருக்கின் றன. அதற்கேற்ப கோரிக்கைகளும், கோஷங் களும் மாற வேண்டியிருக்கிறது. இதைப்புரிந்து கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது. ஆனால், உண்மை எப்போதுமே வெற்றி பெறும். இடையில் ஏற்பட்டிருக்கிற இந்தப் பின்னடைவு மிக மிகத் தாற்காலிகமானது.

(நாளை முடியும்)






என்எல்சி பங்கு விற்பனையைக் கண்டித்து பிஎஸ்என்எல்-எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்



திருப்பூர், ஜூலை 4-
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி எல்ஐசி மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நெய்வேலி என்எல்சி பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதென்ற மத்திய அரசின் முடிவைக் கண்டித்து தொலைத் தொடர்பு ஊழியர் அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்என்இஏ சங்கத்தைச் சேர்ந்த பழனிவேல்சாமி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர், என்எப்டிஇ சங்கத் தலைவர்களில் ஒருவரான ஜெகநாதன், எப்என்டிஓ சங்க நிர்வாகி தனபதி, ஏடிபி சார்பில் ஜான் சாமுவேல் ஆகியோர் மத்திய அரசின் பொதுத்துறை பங்கு விற்பனை முடிவைக் கண்டித்து உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கணக்குத்துறை அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த கேசவன் நன்றி கூறினார்.
கோவை
பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்க முயலும் மத்திய அரசை கண்டித்து தொலைதொடர்பு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை மெயின் எக்ஜேஞ் அருகில் வியாழனன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல்.யு வின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். என்.எப்.டி சங்கத்தின் சார்பில் ராமகிருஷ்ணன், எஸ்.என்.இ.ஏ வின் பிரசன்னா, அதிகாரி சங்கங்களின் சார்பில் உஸ்மான் அலி, பி.எஸ்.என்.எல்.யு சார்பில் வெங்கட்ராமன் ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கே.சந்திரசேகரன் நன்றி கூறினார்.
உதகை
அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உதகையில் புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். முகவர்கள் சங்கத்தின் நிர்வாகி ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி ஊழியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக எல்ஐசி ஊழியர் சங்கத்தின் செயலாளர் கோபால் நன்றி கூறினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம்
காவல்துறை மீது பொது விசாரணை மன்றம் கண்டனம்


தேனி, ஜூலை 31-பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்க கடுமையான பரிந்துரைகளை தமி ழக முதல்வர் அளித்த போதி லும் தமிழக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில் பார பட்சம் காட்டுவதாக ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடை பெற்ற பொதுவிசாரணை மன் றம் கண்டனம் தெரிவித்துள் ளது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் செவ் வாயன்று பெண்கள், குழந்தை கள் மீதான வன்முறைகள் தொடர்பான பொதுவிசாரணை தேனியில் நடைபெற்றது. பொது விசாரணையில் 16 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நடுவர்களாக மாதர் சங்கத்தின் அகில இந் தியச் செயலாளர் உ.வாசுகி எவிடென்ஸ் இயக்குநர் ஏ.கதிர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உ.நிர்மலா ராணி, பிரபல மன நல மருத்துவர் டி.சுகதேவ், காந்தி கிராம பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் மு.குரு வம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுவிசாரணையின் பின்னணி குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி பேசினார். நடுவர் களை அறிமுகம் செய்து மாநி லத் தலைவர் என்.அமிர்தம் உரையாற்றினார். வழக்குகளை முன்வைத்து மாவட்டச் செய லாளர் சு.வெண்மணி, மாவட் டப் பொருளாளர் பி.சாந்தி, மாவட்டத் துணைச் செயலா ளர்கள் ஈ.முத்துலட்சுமி, பி. சித்ரா ஆகியோர் பேசினர். முன்னதாக மாவட்டத் தலைவர் எம்.விஜயா வரவேற்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் பி.ரோஜா நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தனலட்சுமி, பாப் பாத்தி, கோமதி, சுஜதா, அன்ன லட்சுமி, மீனா, ரமாதேவி, சித்ரா, சீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்விசாரணையில், எஸ்சி, எஸ்.டி பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகள் 8, குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் படு கொலை வழக்குகள் 5, குடும்ப வன் முறை வழக்குகள் 3 இடம் பெற்றன. தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் மீதான வன்முறை வழக்கு விசாரணைக்கு வந்தது.
தீர்மானங்கள்
பொது விசாரணையைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொது விசாரணையில் பதிவு செய்யப்பட்ட பெண்க ளுக்கு எதிரான வன்முறை வழக்குகளை பரிசீலித்ததில் மாவட்ட காவல்துறை உயர்மட் டம் முறையான விரைவான நடவடிக்கை எடுக்காமல் உணர்வுப்பூர்வமற்ற அணுகு முறையை கடைபிடிப்பதை வெளிப்படையாகக் காண முடிந்தது. தமிழக முதல்வர் பெண்களுக்கு எதிரான வன் முறைகளை ஒடுக்க கடுமை யான பரிந்துரைகளை அளித் துள்ள போதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, சரியான குற்றப்பிரிவுகளில் வழக்கு போடுவது, குற்றவாளி களை கைது செய்வது போன்ற அடிப்படை நடவடிக்கை களை கூட எடுக்காத கீழ் மட்ட காவல்துறையும், அவர் களுக்கு துணைபோகும் உயர் மட்ட காவல்துறையும் கண் டனத்துக்குரியது.
ஜெயப்ரதா பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொலை வழக்கில் போதுமான ஆதாரங் கள் இருந்தும் இறந்த பெண் ணின் தந்தை புகார் கொடுத் தும் 376 ஐபிசி பிரிவு பதிவு செய்ய மறுப்பது, காவல்துறை யினரால் கொடூரமான வன் முறைக்கு ஆளாகிய வசந்தி வழக்கில் குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்காதது இதற்கு சிறந்த உதாரணமாகும்.எஸ்.சி.எஸ்.டி வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு களில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டவுடன் கிடைக்க வேண் டிய நிவாரணம் கிடைப்ப தில்லை. அல்லது அதற் கென்று தனி போராட்டம் நடத்த வேண் டியுள்ளது. தலித் பெண்கள் மீதான வன்முறை வழக்கு களில் வன்முறைக்குரிய குற்றப்பிரிவு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்படுவதில்லை. தலித் பெண்கள் மீதான அனைத்து வழக்குகளி லும் எஸ்.சி.எஸ்.டி வழக்கு களை பதிவு செய்ய வேண்டும்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்கு களில் குழந்தைகளை பாலி யல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2012யில் வந்துள் ளது. 2012க்கு முன் நடைபெற்ற குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளிலும் இச்சட்டத்தின் சாராம்சத்தோடு விசா ரணைகளை காவல்துறை நடத்த வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை வழக் குகளில் காலதாமதமான தீர்ப்புகள் வருவதால் பாதிக்கப்பட் டவர்கள் வழக்குப் பதிவு செய்யவே முன் வருவதில்லை எனவே விரைவு நீதிமன்றங் கள் உடனடியாக ஏற்படுத்தப் பட வேண்டும். அதே போல் அனைத்து நகரங்களிலும் பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை விசாரிக்க மகளிர் நீதிமன்றங்களை ஏற் படுத்த வேண்டும்.
தலித் பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்குரிய சூழலை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும் குறிப் பிட்ட கால இடைவெளியில் மாவட்ட ஆட்சியர், தலித் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பெண் பஞ்சாயத்து தலைவர்களின் செயல்பாடுகள் குறித்த குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். 10சதவீதம் திருமணங் கள் இந்தியாவில் சாதி மறுப்பு திருமணங்களாக நடைபெறு கிறது. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் கொலை செய் யப்படுவது, கடத்தப்படுவது, தாக்கப்படுவது உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுகிறது. சாதி மறுப்பு திருமணம் செய் பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அவர்களை பாதுகாக்க, கவுரவ குற்றங்களை தடுத்து நிறுத்த சிறப்புச் சட்டம் கொண் டுவர வேண்டும். மேலும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னு ரிமை வழங்கப்பட வேண்டும்.
வன்முறையில் பாதிக் கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் அவர்களது பெற் றோருக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்ய வேண் டும். எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ அந்த கட்சியை சேர்ந்தவர்கள் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்படு வதை தவிர்த்து திறமை அடிப் படையில் நியமிக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உ.வாசுகி பேச்சு
பொது விசாரணை முடிவில் பேசிய மாதர் சங்கத்தின் அகில இந்தியச் செயலாளர் உ.வாசுகி, பொது விசாரணை யில் பங்கேற்று தங்கள் குறை களை தைரியமாகச் சொன்ன அனைவரும் போராளிகளே ஆவார். பாதிக்கப்பட்ட பெண்க ளுக்கு ஜனநாயக மாதர் சங்கம், இதர அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு மக்களை திரட்டி நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடும் என்றார்.

இருந்தும் கெடுத்து, செத்தும் கெடுத்த கணக்கனின் கதைபோல...
டி.கே. ரங்கராஜன் எம்.பி.,
இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான் கணக்கன் என்று ஒரு நாட்டுப்புறக் கதையுண்டு.ஒரு ஊரில் கணக்கர் ஒருவர் இருந்திருக்கிறார். அநியாய முறையில் வரி வசூல் செய்வது, அப்பாவி மக்களை வம்பு வழக்குகளில் சிக்கி விடுவது என அந்த ஊர் மக்களை சித்ரவதை செய்து வந்திருக்கிறார். இதனால் அந்த ஊர் மக்கள் அவர்மீது கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருந்திருக்கிறார்கள். கணக்கருக்கு வயதாகி மரணப்படுக்கையில் விழுந்துவிட்டாராம். அப்போது அந்த ஊர் மக்களையெல்லாம் அழைத்து நான் உங்களுக்கு ஏராளமான தொல்லை கொடுத்துவிட்டேன், நான் ஒரு பாவி என்று வருந்தியிருக்கிறார். மக்களும் சாகிற காலத்திலாவது இவர் திருந்தினாரே என்று நினைத்து, நடந்தது நடந்து விட்டது. உங்களது கடைசி ஆசை என்ன? என்று கூறினால் அதை நிறைவேற்றி வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு அந்த கணக்கர் இந்த ஊருக்கு ஏராளமான தொல்லை கொடுத்துவிட்டதால் இந்த ஊர் இடுகாட்டில் என்னை புதைக்க வேண்டாம், நான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக அடுத்த ஊர் இடுகாட்டிற்கு கொண்டு சென்று புதைக்க வேண்டும். இது தான் என் கடைசி ஆசை என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டாராம்.ஊர் மக்களும் கணக்கரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைப்போம் என்று நினைத்து பிணத்தை தூக்கி கொண்டு அடுத்த ஊர் இடுகாட்டிற்கு சென்றார்களாம்.
அந்த ஊர்க்காரர்கள் ஏன் உங்கள் ஊர் பிணத்தை எங்கள் ஊருக்கு கொண்டு வருகிறீர்கள், இது யாருடைய பிணம் என்று கேட்க செத்துப்போன எங்கள் ஊர் கணக்கரின் பிணம் என்று இவர்கள் கூற, பெரும் வில்லங்கமான அவருடைய பிணத்தை புதைக்க எங்கள் ஊர் தானா கிடைத்தது? நாங்கள் என்ன இளித்தவாயர்களா? என்று சண்டைக்கு வர பதிலுக்கு இவர்களும் சண்டைக்குப் போக இருதரப்பிலும் பலரின் மண்டை உடைந்திருக்கிறது. இதைத்தான் இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான் கணக்கன் என்று அந்த ஊர் மக்கள் வேதனையாக கூறியிருக்கிறார்கள்.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 அரசு ஆட்சியிலிருந்த நான்கரை ஆண்டு காலமும் மக்களுக்கு கொடுத்த தொல்லைகள் ஏராளம். விலைவாசி உயர்வு, வேலையின்மை, உச்சகட்ட ஊழல், பொதுத்துறைகளை சூறையாடுவது, வறுமை குறித்த மோசடியான அளவீடு என மக்களை வஞ்சித்து வதைத்த ஐ.மு.கூட்டணி அரசு, தேர்தல் நெருங்குகிற காலத்தில் தன்னுடைய குறுகிய அரசியல் ஆதாயத்தை மட்டும் கணக்கில் கொண்டு தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதாக அறிவித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் இந்த விபரீத முடிவு ஆந்திராவில் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களில் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநில பிரிப்பு குறித்து அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா குழு தனது அறிக்கையில் அளித்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல. இந்த முடிவை எதிர்த்து ஆந்திராவை பிரிக்கக்கூடாது என்று ராயலசீமா மற்றும் கடலோர மாவட்டங்கள் முழுவதும் புதனன்று முழு அடைப்பு போராட்டம் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சி எம்.பி. சாம்ப சிவராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் சதீஷ்குமார், ஆதி நாராயணராவ், தோட்டா நரசிம்மம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல இன்னும் பலரும் விலகக்கூடும். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் சேர்ந்து தெலுங்கானா பகுதியில் சில சீட்டுகளை பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் இந்த முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் ஆந்திராவின் பிற பகுதிகளில் அந்தக் கட்சிக்கு பலத்த அடி கிடைக்கக்கூடும். ஆந்திராவை பிரித்து புதிய மாநிலம் அமைப்பதால் ஏற்படப்போகும் பல்வேறு சிக்கல்களை இந்து (31-07-13) பத்திரிகை விவரித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா என்று இரு மாநிலங்கள் அமைவதால் நதிநீர்ப்பங்கீடு, ஊழியர்கள் பகிர்வு, நிதி மற்றும் ஓய்வூதியம் என பல்வேறு பிரச்சனைகள் எழும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் நதிநீர் தாவாக்கள் தீர்க்கப்பட முடியாத பெரும் பிரச்சனையாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆந்திரா, தெலுங்கானாவும் சேரும். தற்போது ஒரே மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் இடமாற்றம் பணிமாற்றமும் பெரும் தலைவலியாக உருவெடுக்கும். ஐதராபாத்துடன் இணைந்த தனி மாநிலம் தான் வேண்டும் என்று தெலுங்கானா கோரிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிவந்துள்ளனர்.
ஐதராபாத்தை விட்டுக் கொடுக்க முடியாது என எதிர்த்தரப்பு கூறுகிறது. இப்போதைக்கு பத்து ஆண்டுகள் ஐதராபாத் இரண்டு மாநிலங்களுக்கும் பொது தலைநகரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது ஒரு பெரிய பிரச்சனையாகவே நீடித்துக் கொண்டிருக்கும்.தெலுங்கானா மாநிலம் அறிவிக்கப்பட்டவுடனேயே உ.பி. உட்பட பல்வேறு மாநிலங்களில் தனி மாநிலம் வேண்டும் என்ற கலகக்குரல்கள் கேட்க துவங்கிவிட்டன. உ.பி. மாநிலத்தை நான்காகப் பிரிக்க வேண்டும் என்று ஏற்கனவே குரல்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. கூர்க்காலாந்து, காஷ்மீர் உட்பட பல்வேறு இடங்களிலும் மாநில பிரிப்பு குரல்கள் வலுப்படும். தனி விதர்ப்பா அமைக்க வேண்டும் என்று அந்த குரல் மராட்டியத்திலிருந்து மீண்டும் கேட்கத் துவங்கியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலுள்ள கட்சிகள் கூட இந்த ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ளன. உதாரணமாக ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இது ஒரு ஆபத்தான விசயம். புதிய மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆங்காங்கே எழுவதை இது ஊக்கப்படுத்தும் என்று கூறியுள்ளார்.தமிழகத்தில் 1967ம் ஆண்டு ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் தாலுகா அமைக்கும் விசயத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு வரை சென்றது. நிஜாம் ஆட்சியில் தெலுங்கானா பகுதி இருந்ததால் தனி மாநிலம் ஆக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டதால் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவில் பல சமஸ்தானங்கள் இருந்தன. அத்தனை பேரும் இப்போது கிளம்பி எங்கள் பழைய சமஸ்தானத்தை இப்போது புதிய மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டால் நிலைமை என்னவாகும். காங்கிரஸ் கட்சி மக்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்காகவே இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளது. ஆட்சியில் சாதனைகளை கூறி மக்களிடம் வாக்குக் கேட்க முடியாது என்பதற்காக குறுகிய பிரதேச வெறியைத் தூண்டிவிட முயல்கிறது. மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத அரசு இப்படித்தான் குறுக்கு வழிகளில் வெற்றி பெற நினைக்கும். வறுமையும் வேலையின்மையும் வரலாறு காணாத ஊழல்களும் இந்திய மக்கள் அனைவரின் பொதுப் பிரச்சனையாக உள்ளது.
மாநிலங்களை பிரிப்பதால் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.மொழிவழி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வாரிசுகளான மார்க்சிஸ்ட்டுகள் மாநிலங்களை துண்டு துண்டாக உடைப்பதை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர். மாநிலத்தின் அதிகாரங்களை குறைக்கவும், மத்தியில் அதிகாரங்களை குவிக்கவுமே இது பயன்படும். இந்திய வரலாற்றில் பல்வேறு தவறுகளை செய்து கலவரத்திற்கு கால்கோள் நடத்திய காங்கிரஸ் தற்போது மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை செய்துள்ளது.

-------
ஏற்றுமதியாளர்களையும் தற்கொலையை நோக்கித் தள்ளும் தாராளமயக் கொள்கைகள்!
டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா சாடல்!


திருப்பூர், ஜூலை 31-மத்திய அரசு பின்பற்றும் தாராளமயக் கொள்கைகளால் நம் நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைப் போல, ஏற்றுமதியாளர்களையும் தற்கொலையை நோக்கித் தள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர், பொருளாதாரப் பேரறிஞர் டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறினார்.இன்றைய பொருளாதார சூழல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பூரில் செவ்வாயன்று நடைபெற்றது. கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு முற்போக்கு வாசகர் வட்டத்தின் அமைப்புக்குழு உறுப்பினர் வே.தூயவன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் எஸ்.பொன்ராம் வரவேற்றார். இதில் பங்கேற்று, "இன்றைய பொருளாதார சூழல்" குறித்து டாக்டர் ஆத்ரேயா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
1991ம் ஆண்டு, "நாடு கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வெளிநாட்டு கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை" என்று சொல்லித்தான் புதிய பொருளாதாரக் கொள்கையை ஆட்சியாளர்கள் அமல்படுத்தினர். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் அந்த கொள்கைகள் பின்பற்றப்படும் நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் அதே நெருக்கடி நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. 1991ம் ஆண்டு பாடிய அதே பாட்டைத்தான் இப்போதும் மத்திய ஆட்சியாளர்கள் பாடிக் கொண்டிருக்கின்றனர். உற்பத்தி செய்த சரக்குகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நம் நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தை விட பொருட்களை இறக்குமதி செய்யும் செலவு அதிகமாக இருக்கிறது. அந்நியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளது. நிதி நெருக்கடியும் கடுமையடைந்திருக்கிறது. இந்த காரணங்களால்தான் நமக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.
றாக்குறை ஏற்படுகிறது.இதனால் நாட்டின் வரவு செலவு இடிக்கிறது. வளர்ச்சிப் பணிகளுக்குக் காசில்லை என்று அரசு கையை விரிக்கிறது. இந்த பற்றாக்குறை என்பது நம் நாட்டு மொத்த உற்பத்தியில் 4.8 சதவிகிதமாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பற்றாக்குறையின் உண்மையான அளவு நம் மொத்த உற்பத்தியில் 11.8 சதவிகிதமாகும். ஆனால் வெளிநாட்டிற்குச் சென்று கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் நம் உழைப்பாளகள் இந்தியாவிற்கு பணம் அனுப்புவதால்தான் இந்த பற்றாக்குறை 4.8 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவிற்கு அந்நியச் செலவாணி கொடுக்கக்கூடிய நம் நாட்டு உழைப்பாளிகளுக்கு மத்திய அரசு எந்த விருதும் தருவதில்லை. ஆனால் ஒரு பைசா கூட அந்நியச் செலாவணி தராத, பெப்ஸி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றும் இந்திரா நூயிக்கு மத்திய அரசு விருது வழங்குகிறது.

பற்றாக்குறையை சமாளிக்க அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்கிறது அரசு. ஆனால் பல்வேறு வரியினங்கள் மூலம் இந்நாட்டின் பெரும் பணக்கார நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.5 லட்சத்து 22 ஆயிரம் கோடியை வசூலிக்காமல் கடந்த பட்ஜெட்டில் சலுகையாக அவர்களக்கு வழங்கிவிட்டனர். அதேசமயம் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து பணம் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். எப்போது பார்த்தாலும், நம் நாட்டின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். 2012 - 13ல் 8.5 சதவிகிதமாக ஜிடிபி உயரும் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள், ஆனால் அது படிப்படியாகத் தேய்ந்து 5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்க எப்பாடுபட்டாவது அந்நியச் செலாவணியை அதிகரிக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. வெளிநாட்டுக் கம்பெனிகளின் காலில் விழுந்தாவது, பட்டுக்கம்பளம் விரித்து நம் ஊருக்கு வரச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அந்நிய நேரடி மூலதனம் நம் நாட்டுப் பங்குச் சந்தைக்கு வர வேண்டும் என்று கண்மூடித்தனமாக ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். அப்படி வரும் வெளிநாட்டுப் பணம் நம் உற்பத்தித் துறையில் ஈடுபடப் போவதில்லை. லாபம் ஈட்டுவதை மட்டுமே குறியாகக் கொண்ட அந்நிய நேரடி மூலதனம் பங்கு சந்தையில் லாபம் கிடைத்தால் இருக்கும், இல்லாவிட்டால் வெளியேறிவிடும். இதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடையாது. உள்நாட்டுச் சந்தையை பலப்படுத்தி விவசாயம், தொழில் ஆகியவற்றுக்கு ஊக்கம் கொடுத்தால் நம் பொருளாதாரம் ஆரோக்கியமாக வளரும். ஆனால் ஆட்சியாளர்கள் முழுக்க முழுக்க அந்நிய நேரடி மூலதனத்தை இங்கு வரவைப்பதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுகின்றனர். விவசாயத்திற்கோ, தொழிலுக்கோ எந்த உதவியும் செய்வதில்லை. தாராளமயம் என்பது ஒரு நல்ல சொல். தாராள மனம் என்பதைக் குறிக்கும். ஆனால் தாராளமயக் கொள்கை என்பது அப்படியல்ல, அதை "நெறிமுறை நீக்கம்" என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
இதனால் தான் நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கும் அரசு எந்த உதவியும் செய்வதில்லை. அவர்களையும் தற்கொலையை நோக்கித் தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் யாரும் அத்தகைய முடிவுக்குப் போகக்கூடாது, ஆட்சியாளர்களின் கொள்கைகளை மாற்றுவதற்குப் போராட வேண்டும்.திருப்பூரைப் பொறுத்தவரை பின்னலாடை ஏற்றுமதி ஒன்றை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது. பன்முகமான தொழில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் திருப்பூரைப் பாதுகாக்க வேண்டும் என்று டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறினார்.
இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் ஊராட்சித் தலைவர் வே.முத்துராமலிங்கம், பேராசிரியர் சுந்தரம், பார்க் கல்லூரி முதல்வர் திருமாறன், கவிஞர் சுப்ரபாரதிமணியன், ஆர்.ஏ.ஜெயபால், டிரிபிள் எக்ஸ் குப்புசாமி, பேண்டம் நடராஜன், எம்எல்எப் சம்பத், ஹரிஹரன் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் இதில் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் நிசார் அகமது, கே.காமராஜ், கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறினார்.


நலவாரியத்தை முறைப்படுத்த கோரி தொழிற்சங்கத்தினர் ஆவேச மறியல்
கோவையில் 1897 பேர் கைது


கோவை, ஜூலை 30 -நலவாரிய செயல்பாட்டை முறைப்படுத்த வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் கோவை இராமநாதபுரம், மேட்டுபாளையம், சூலூர், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 6 மையங்களில் சிஐடியு, எஜடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, எல்பிஎப், பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் செவ்வாயன்று ஆவேச மறியலில் ஈடுபட்டனர். இதில் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.அனைத்து உடல் உழைப்பு வாரியங்களுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்து வாரியக் கூட்டங்களை நடத்த வேண்டும். தொழிற்சங்கம் மூலம் விண்ணப்பிக்கும் பழைய நடைமுறை தொடர வேண்டும். வாரிய அலுவலகத்திற்கு தொழிலாளியை ஒவ்வொரு முறையும் நேரில் வர வேண்டும் என்று சொல்லி தொழிலாளியை அலைக்கழிக்கக் கூடாது. கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் பெற்று வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. உயர்ந்து வரும் விலைவாசி உயர்விற்கேற்ப்ப நிதிப்பலன்களை கூடுதலாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மறியலின் போது வலியுறுத்தப்பட்டது.
கோவை இராமநாதபுரம் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.சிங்காரவேலு தலைமை தாங்கினார். சிஐடியு சார்பில் கோவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஆர்.வேலுசாமி, எஸ்.மூர்த்தி, பி.கே.சுகுமார், சந்திரன் எஐடியுசி டி.எம்.மூர்த்தி, ஆர்.ஏ.கோவிந்தராஜ் ஐஎன்டியுசி டி.எஸ்.ராஜாமணி, பி.சுப்பிரமணி, எல்பிஎப் ப.கே.குமார், எ.முகம்மது மற்றும் பிஎம்எஸ் பி.முருகேசன், டாக்ஸி நாகராஜ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆவேச முழக்கங்கள் எழுப்பி இராமநாதபுரம் திருச்சி சாலையில் மறியல் செய்தனர். இதில் 180 பெண்கள் உள்ளிட்டு 990 பேர் கைது செய்யப்பட்டனர். மேட்டுபாளையம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத்தலைவர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் எஐடியுசி சார்பில் பி.ரங்கசாமி, ஐஎன்டியுசி வி.நடராஜன், எச்எம்எஸ் சண்முகம் மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சூலூர் நால்ரோட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு கோவை மாவட்ட பொருளாளர் எஸ்.கிருஷ்னமூர்த்தி மற்றும் சிஐடியு கட்டுமான சங்கத்தின் மாவட்டத்தலைவர் கே.மனோகரன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு சார்பில் ஆறுமுகம் எஐடியுசி சார்பில் கே.ஜி.ஜெகநாதன் ஐஎன்டியுசி சார்பில் எ.லோகநாதன் எச்எம்எஸ் எம்.பழனிச்சாமி எல்பிஎப் ஆறுமுகம் பிஎம்எஸ் லட்சுமணன் உள்ளிட்ட 76 பெண்கள் உள்ளிட்டு 285 பேர் கைது செய்யப்பட்டனர். அன்னூர் பயணியர் மாளிகை முன்பு நடைபெற்ற மறியல் போரட்டத்திற்கு எஐடியுசி யின் சி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு சார்பில் இ.வி.வீரமணி, டி.ராஜ், முகமது மூசிர் மற்றும் ஐஎன்டியுசி யின் சண்முகம் எச்எம்எஸ் சிங்கைபாபு பிஎம்எஸ் தேவராஜ் மற்றும் திரளான பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் சிஐடியு வி.பெருமாள், பிஎம்எஸ் மாநிலச் செயலாளர் சிடிசி ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு பாலாமூர்த்தி, எஐடியுசி ஞானமூர்த்தி, எச்எம்எஸ் பி.காளிமூத்து ஐஎன்டியுசி எம்.கணேசன் மற்றும் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.பொள்ளாச்சி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு எம்.அருணகிரிநாதன் எஐடியுசி கே.எம்.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் எஸ்.துரைசாமி, எச்எம்எஸ் மனோகரன் உள்ளிட்டு 39 பெண்கள் உள்ளிட்ட 270 பேர் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டத்தில் ஆறு மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்று தமிழக அரசிற்க்கெதிராகவும், தொழிலாளர் நல வாரியத்திற்கு எதிராகவும் ஆவேச முழக்கங்களிட்டு கைதாகினர்.
--------
விசை இன்றி அசைவே இல்லை
எஸ்.எஸ். சுப்ரமணியன்


நவீன மனித குல சமுதாயத்தின் வாழ்க்கையோடு இணைந்து நிற்பது மின்சாரமாகும். நாட்டின் தொழில் பெருக்கத்திற்கு, விவசாய முன்னேற்றத் திற்கு, பொருளாதார வளர்ச்சிக்கு, அடிப் படை காரணியாய் உள்ளது மின்சார மாகும். விசை இல்லாமல் மனித குல அசைவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மின்சாரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.மனித குல சமுதாய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றும் மின்சாரம், அனல், புனல், எரிவாயு, அணு மற்றும் மரபுசாரா ஆதாரங்களான காற்றாலை, சூரிய சக்தி, கடல் அலை, கழிவுப் பொருள்கள் ஆகிய ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்திய மின் உற்பத்தி ஆதாரங்களில் பெரும் பங்கு வகிப்பது அனல் மின்சார மாகும். அதிலும் குறிப்பாக நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யும் மின்சாரம் இந்திய மொத்த மின் உற்பத்தியில் 54 சதவீதமாகும்.
அது மேலும் 70 சதவீதமாக மாறுகின்ற அள விற்கு நிலக்கரியை எரிபொருளாகப் பயன் படுத்தி மின் உற்பத்தி செய்யும் நிலையங் கள் அமைக்கப்பட உள்ளன. 2011 ஆம் ஆண்டின் ஆய்வு அறிக்கை யின் படி 284 பில்லியன் டன் நிலக்கரி இருப்பு இருப்பதாக கணக்கிடப்பட் டுள்ளது. 284 பில்லியன் டன் நிலக்கரிக் கான ஆதாரங்கள் இருந்த போதிலும் இந்திய நாடு முழுவதும் உள்ள மின் நிலை யங்களுக்கு நிலக்கரியை விநியோகம் செய்வதில் பற்றாக்குறை உள்ளது. அதா வது 100 மில்லியன் டன் பற்றாக்குறை உள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டு அதை ஈடுகட்ட 85 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. 12 வது ஐந்தாண்டு திட்ட முடிவில் அதாவது 2016-2017 ஆம் ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு 250 மில்லியன் டன்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறை சம்பந்தமாக புள்ளி விபரங் கள் இப்படி இருப்பினும் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி யை கிடைக்கச் செய்து மின் உற்பத்தியை உத்தரவாதப்படுத்துவதின் மூலமே மின் பற்றாக்குறையை போக்க வழிவகுக்கும்.
மின்சார உற்பத்தியில் அனல் மின் நிலையங்களுக்கு அடுத்து இடம் பெறு வது நீர் மின் உற்பத்தியே, ஆனால் ஆளு கின்ற அரசுகள் நீர் மின் உற்பத்திக்கான ஆதாரங்களை முழுமையாக பயன்படுத் தாத நிலையே நீடிக்கின்றது. இந்தியா முழுவதும் 1,54,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நீர் ஆதாரங்கள் இருந்த போதிலும், இது வரையில் 39,460 மெகா வாட் மட்டுமே மின்சாரம் புனல் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை மொத்த புனல் ஆதாரத்தில் 18.61 சதவீதமாகும். இச்சூழ்நிலையில் ஆளுகின்ற அரசு கள் இருக்கின்ற நீர் ஆதாரங்களை முழு மையாக பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதின் மூலமே மின் பற்றாக் குறையை எதிர்கொள்ள இயலும். இருக் கின்ற நீர் ஆதாரங்களை முழுமையாக மின் உற்பத்தி செய்ய அரசை வலியுறுத் தும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.இந்திய நாட்டின் மின் தேவையை எதிர் கொள்ள அனல், புனல், அணுமின் உற் பத்திகளோடு, மரபுசாரா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின் உற்பத்திக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது காற்றாலை, சூரிய ஒளி, கடல் அலை, திடக்கழிவுப் பொருள்கள் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் முறையை ஊக்குவித்து மின் உற்பத்தி செய்வதின் மூலம் மின் தேவையை எதிர் கொள்ள முடியும்.
அரசு அதற்கான பணிகளை செய்வதின் மூலம் தேவையான மின் உற் பத்தியை செய்து மின் பற்றாக்குறையை போக்கிட இயலும், இதற்கான கொள்கை திட்டங்களை வகுக்கும் மாநாடாக இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் மாநாடு அமைய உள்ளது.இந்திய பொருளாதார வளர்ச்சியோடு இணைந்து இருக்கின்ற மின்சாரத்தை மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்து விநியோகிக்க வேண்டுமானால் அது அரசுத்துறையாகவே நீடிக்க வேண் டும் என்ற டாக்டர் அம்பேத்கர் அவர் களின் மின்சார சட்ட வடிவமைப்பில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களை கணக் கிலே கொண்டு இந்திய நாடு சுதந்திரத் திற்கு பின்னர் ஆண்ட அரசுகள் மின் உற் பத்திக்கு போதிய முக்கியத்துவம் கொடுத்த காரணத்தினால் ஐந்தாண்டு திட்டங்களில் மின் உற்பத்திக்கு நிர்ணயிக் கப்பட்ட இலக்குகளில் 90 விழுக்காடு அடைய முடிந்தது. இதனால் 1990 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மின்பற்றாக் குறை மிக சொற்பமான அளவே இருந்த தை கண்கூடாகக் காண முடிந்தது. 1990-91 ஆம் ஆண்டுகளில் நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கத்திற்கு வந்த பின்னர் அதன் தாக்கம் மின்சாரத் துறையிலும் பிரதிபலித்தது. மின்சாரம் ஒரு சமூகப் பொருளாக இருந்ததை மாற்றி, சந்தைப் பொருளாக்கி அதன் மூலம் நாட்டின் இயற்கை செல்வ வளங்களை இந்திய, அந்நிய பெரு முதலாளிகளுக்கு மடை மாற்றம் செய்வது என்று நிலை யினை எடுத்து மின்சாரத் துறையில் அரசு தனக்கிருந்த பொறுப்பை தட்டி கழித்த காரணத்தினால் 8, 9, 10, 11 வது ஐந் தாண்டு திட்டங்களில் மின் உற்பத்திக் காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாததை கீழ்க்கண்ட புள்ளி விவரங்கள் பறைசாற்றுகின்றன.
திட்டம் மெகாவாட் மெகாவாட் சதவீதம் (இலக்கு) (உற்பத்தி)
8வது 1992-1997 30,538 16,423 53.8ரூ
9வது 1997-2002 40,245 19,015 47.05ரூ
10வது 2002-2007 41,110 21,180 51.76ரூ
11வது 2007-2012 78,700 54,964 69.83ரூ
மின்சார உற்பத்தியில் அரசு தனியாரை ஊக்குவிக்கின்ற நடவடிக்கையில் ஈடு பட்டது. அதாவது 10 வது ஐந்தாண்டு திட் டங்கள் வரை மின்சார உற்பத்தியில் தனி யாரின் பங்கு என்பது வெறும் 23 சதவீத மாக இருந்தது அது 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் 33 சதவீதமாக உயர்ந்து 12 வது ஐந்தாண்டு திட்டங்களில் 50 சத வீதமாக மாறி எதிர்வரும் காலங்களில் 70 சதவீதமாக உயர்வதற்குண்டான ஊக்கு விப்பை ஆளும் அரசு செய்து வருகிறது.மின்சார உற்பத்தியில் தனியாரை ஊக்குவிக்கின்ற அதே வேளையில் தனியார் உற்பத்தி செய்கின்ற மின்சாரத் திற்கு அரசு மின் கட்டணத்தை நிர்ணயிப் பதற்கு மாறாக திறந்தவெளி மின்சார பரி வர்த்தனை என்ற கொள்கையின் கீழ் தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அவர்களே மின் தேவையாளர்களுக்கு விற்பனை செய்து கொள்ளலாம் என்ற அரசு கொள்கை அறிவிப்பின் மூலம் மின் கட்டண நிர்ணயிப்பையும் தனியாருக்கு தாரை வார்க்கும் நிலையை உருவாக்கி யுள்ளது.
இவைகள் மட்டுமல்லாமல் :
1) தேவைக்கேற்ற மின் உற்பத்திக்கு திட்டமிடாதது. மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யாதது2) மாநிலங்களில் உள்ள மின் நிலையங்கள், தனது உற்பத்தி திறன் அளவுக்கு முழுமையாக உற்பத்தி செய்ய இயலாமை3) வலுவான துணை தொடரமைப்பு பாதைகளும், விநியோக வலைப் பின்னல்களும் இல்லாதது 4) தொடரமைப்பு, விநியோகத்தில் பேரிழப்புகள் ஏற்படுவது.5) மாநில மின் வாரியங்கள் மின் உற் பத்திக்கான போதிய நிதியாதாரங்களை ஏற்படுத்தாதது போன்றவைகளே மின்பற்றாக்குறைக்கு காரணிகளாக உள்ளன.1991 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு இதர துறைகளில் நவீன தாராளமயக் கொள்கையை அமலாக்கியது போல் மின் துறையிலும் அமலாக்கும் விதமாக சமூக நல பார்வையோடு இருந்த மின்சார சட்டங்கள் அனைத்தையும் நீக்கி மின்சார சட்டம் 2003 ஐ சட்டமாக்கினர்.மின்சார சட்டம் 2003 இன் மூலம் தேவைக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்வது, மின் வாரியங்களின் நிதி நிலைமைகளை சீரமைப்பது, மின் கட்டணத்தை வெகுவாக குறைப்பது, நிர்வாகத் திறமையை வெகுவாக அதிகப்படுத்துவது, மின் நுகர்வோர் களுக்கு சிறந்த சேவை செய்வது, மின் இழப்பு, மின் திருட்டை தடுப்பது போன்ற நோக்கங்களை நிறைவேற்ற முயற்சிப்ப தாக கூறினர்.
மின்சார சட்டம் 2003ஐ பயன்படுத்தி மாநில மின் வாரியங்களை துண்டாடினர். கடந்த பத்தாண்டுகளாக மின்சார சட்டம் 2003 அமலாக்கலின் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்று பரிசீலிக்க அமைக்கப் பட்ட குழுவின் அறிக்கையில் கூறுவது மின்சார உற்பத்தில் தனியாரை நம்பி இருந்த காரணத்தினால் தேவைக்கேற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலாமை யால், மின் பற்றாக்குறை கூடுதலான தோடு, இந்திய மக்கள் தொகையில் ஒரு பெரும் பகுதி மின்சாரம் சென்றடையாத நிலையே நீடிக்கின்றது என்ற முடிவிற்கே வந்துள்ளனர்.மின் உற்பத்தி தனியாரின் கட்டுப் பாட்டுக்குள் சென்றதனால் சாதாரண மின் நுகர்வோர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் கட்டுப்படியான விலையில் மின்சாரத்தை அளிக்க இய லாததோடு மட்டுமல்லாமல் மின் கட் டண உயர்வு அவர்கள் செலுத்த முடியாத அளவிற்கு உயரத் துவங்கியுள்ளது. இந்திய மக்களின் மின்சார பாதுகாப்பு என்பது, நாட்டின் இயற்கை செல்வ வளங் களை கொள்ளையடிக்கும் நாட்டுப்பற்று இல்லாத ஆளும் வர்க்கத்தின் கையில் ஒப்படைப்பது என்பது தான் மின்சாரம் சட்டம் 2003 ன் அமலக்கலினால் ஏற் பட்டுள்ளதுஇந்திய மக்கள், மின் துறை ஊழியர்கள் மின்சார சட்டம் 2003 இல் தேவையான மாற்றங்களை செய்திடுக என ஆளும் அரசை வலியுறுத்தும் நிகழ்ச்சி நிரலை முன் வைத்து இம்மாநாடு நடைபெறு வதோடு கீழ்கண்ட மாற்றுக் கொள்கை களை மின்துறையில் அமல்படுத்து என்ற முழுக்கத்தோடு இம்மாநாடு நடைபெற உள்ளது.
மின் உற்பத்தியை அதிகப்படுத் தும் வகையில் நிதி ஆதாரங்களை உத்தரவாதப்படுத்துவது...மின் உற்பத்தியில் 12 வது ஐந்தாண்டு இலக்கை முழுமையாக அடையச் செய்வது...கட்டுமானத்தில் உரிய கவனத்தை செலுத்தி கூடுதல் மின் உற்பத்தியை துவங்கச் செய்வது, இன்னும் பதினைந்து ஆண்டுகளில் உயர்ந்து வரும் மின் தேவையை சமாளிக்கும் வகையில் ஆறு அல் லது ஏழு லட்சம் மெகாவாட் மின் உற் பத்தி செய்யதிட்டமிடுவது...மத்திய அரசின் நேரடி தலையீட் டில் உருவாக்கப்படும் அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட் மின் நிலையங்களை, மாநில மின் வாரியங்களிடம் அளித்து உற்பத்தியில் ஈடுபடச் செய்வது...அனல், புனல், எரிவாயு மின் நிலையங்களை முறையாக பரா மரித்து முழு உற்பத்திக்கு உத்தர வாதம் செய்வது...உள்நாட்டு ஆதாரங்கள் மூலம், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை பெறுவது...ஏற்கனவே உள்ள மின் நிலையங் களை புதுப்பிப்பது, நவீன மயமாக்கு வதன் மூலம் உற்பத்தி திறனை உத்தரவாதப்படுத்துவது...கிடைக்கின்ற மின்சாரத்தை முறையாக பகிர்ந்தளிக்கின்ற வகை யில் மாநில, மண்டலங்களுக்கு இடையே உள்ள தொடரமைப்பை வலுப்படுத்தி மின்சாரத்தை கொண்டு செல்வது....மின் இழப்பை குறைத்திடும் வகையில் தொடரமைப்பு மற்றும் மின் விநியோக கட்டமைப்பை வலுப் படுத்துவது...மின்சார சிக்கனத்தை அனைத்து மட்டங்களிலும் கடைப்பிடிப்பது..போன்ற மாற்றுக் கொள்கைகளை முன் வைத்து இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாடு காஞ்சியில் 2013 ஆகஸ்டு 10, 11, 12 தேதிகளில் நடைபெறுவதையொட்டி இந்திய மின் ஊழியர்கள் பல்லாயிரக் கணக்கில் சங்கமிக்க உள்ளனர்.


--
திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்



திருப்பூர், ஜூலை 30-பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். இதில் போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் சங்க நிர்வாகி எஸ்.சுப்பிரமணியம் உள்பட பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.


நலவாரிய செயல்பாட்டில் தொழிற்சங்கங்களை புறக்கணிப்பதா?
திருப்பூர், நாமக்கல்லில் மறியல்- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது


திருப்பூர்/நாமக்கல்
திருப்பூர், ஜூலை 30-தமிழகத்தில் கோடிக்கணக்கான முறைசாரா உடலுழைப்பு மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் உரிமையை வெட்டிச் சுருக்கும் விதத்திலும், தொழிற்சங்க உரிமையை முடக்கும் விதத்திலும் தொழிலாளர் நலத்துறை செயல்படுவதை கண்டித்து திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் மாநகர் பழைய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு ஏஐடியுசி மாநிலத் தலைவர் கே.சுப்பராயன், சிஐடியு நிர்வாகிகள்கே.உண்ணிகிருஷ்ணன், எம்.சந்திரன், டி.குமார், பி.முருகேசன், ப.கு.சத்தியமூர்த்தி, பி.பாலன், ஐஎன்டியூசி சார்பில் பி.கே.என்.தண்டபாணி, எல்பிஎப் சார்பில் நாராயணசாமி, எச்எம்எஸ் சார்பில் கணேசன், பிஎம்எஸ் சார்பில் சந்தானம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஊர்வலமாகப் புறப்பட்ட தொழிலாளர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். மறியலில் ஈடுபட்ட அறுநூறுக்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவிநாசி
அவிநாசி பழைய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு சார்பில் பி.முத்துசாமி, ஏஐடியுசி சார்பில் வி.கோபால், ஐஎன்டியுசி சார்பில் சி.பி.மூர்த்தி, எல்பிஎப் சார்பில் வரதராஜ், பிஎம்எஸ் சார்பில் சி.ஜீவா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில்சிஐடியு நிர்வாகிகள் எஸ்.வெங்கடாசலம், அ.ஈஸ்வரன், சண்முகம், என்.சி.பழனிசாமி, ஏ.ராஜன் உள்பட சுமார் 250 பேர் கைதானார்கள்.
உடுமலைப்பேட்டை
உடுமலைப்பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் நடைபெற்றது. இதில் சிஐடியு சார்பில் என்.கிருஷ்ணசாமி, பி.ரத்தினசாமி, பழனிச்சாமி, எல்பிஎப் சார்பில் நாகமாணிக்கம், எச்எம்எஸ் சார்பில் சுப்பிரமணியம், ஏஐடியுசி சார்பில் சௌந்தர்ராஜன், ரணதிவே, ஐஎன்டியுசி சார்பில் சக்திவேல், பிஎம்எஸ் சார்பில் சிதம்பரசாமி ஆகியோர் தலைமையில் சுமார் 110 பேர் கைதானார்கள். உடுமலையில் மற்றொரு இடத்தில் நடைபெற்ற மறியலில் ஏஐடியுசி சார்பில் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் செய்த சுமார் 120 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். முன்னதாக ஊர்வலமாகப் புறப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களை காவல் துறை ஆய்வாளர் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்த முயன்றார். இதனால் காவலர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறையின் ஜனநாயக விரோத செயல்பாட்டைக் கண்டித்து, கோரிக்கை முழக்கங்கள் எழுப்பியபடி அனைவரும் சாலையில் படுத்து மறியல் செய்தனர்.இதில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குமார், ஏஐடியுசி சார்பில் வி.எம்.ஆறுமுகம், எல்பிஎப் சார்பில் வரதராஜன், ஐஎன்டியுசி சார்பில்என்.கே. முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமை வகித்தனர். தொழிலாளர்களின் போராட்டத்தை அடுத்து தலைவர்கள் பேசுவதற்கு காவல் துறை அனுமதி அளித்தது. அதன் பிறகு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
காங்கயம்
காங்கயத்தில் எச்எம்எஸ் சார்பில் ஆர்.முத்துசாமி, சிஐடியு சார்பில் சி.சென்னியப்பன், கணேசன், பிஎம்எஸ் சார்பில் பழனிச்சாமி, எச்எம்எஸ் சார்பில் ஆர்.முருகன், ஏஐடியுசி சார்பில் வி.பி.பழனிசாமி ஆகியோர் தலைமையில் மறியல் நடைபெற்றது. பேருந்து நிலையம் முன்பிருந்து ஊர்வலமாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் செய்ய முயன்றனர். எனினும் வழியிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தி இந்த போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 160 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தாராபுரம்
தாராபுரம் நகரில் சிஐடியு சார்பாக நடைபெற்ற மறியலுக்கு மாவட்டத் துணைத் தலைவர் என்.கனகராஜ் தலைமை வகித்தார். அண்ணா சிலை முன்பாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 75 பேர் பங்கேற்று கைதானார்கள்.
நாமக்கல்
நாமக்கல் நலவாரிய அலுவலகம் முன் மறியல் போராட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பி.தனசேகரன், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மோகன், எல்பிஎப் மாவட்ட செயலாளர் கபாடி எஸ்.பழனியப்பன், எச்எம்எஸ் மாவட்டத்தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, பொருளாளர் பி.சிங்காரம், கே.மோகன், எஸ்.நடராஜன், எம்.ஜி.ராஜகோபால், தண்டபாணி மற்றும் ஐ.ராயப்பன், எஐடியுசி சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.மணிவேல், குழந்தான், என்.தம்பிராஜா, பி.செல்வராஜ், ஆர்.கே.நல்லப்பன், எஸ்.ஈஸ்வரன், சி.ஜெயராமன் மற்றும் எஸ்.ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, ஐயப்பன் கோவில் அருகிலிருந்து ஊர்வலமாகச் சென்று நலவாரிய அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 215 பெண்கள் உள்ளிட்ட 345 பேர் கைது செய்யப்பட்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக